யுத்த பாதிப்பு தொடர்பான புள்ளிவிபரவியல் கணக்கெடுப்பிற்கு முஸ்லிம் காங்கிரஸ் எதிர்ப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, December 28, 2013

யுத்த பாதிப்பு தொடர்பான புள்ளிவிபரவியல் கணக்கெடுப்பிற்கு முஸ்லிம் காங்கிரஸ் எதிர்ப்பு


யுத்த பாதிப்­புக்கள் தொடர்பில் புள்­ளி­வி­ப­ர­வியல் திணைக்­க­ளத்தின் கணக்­கெ­டுப்­பினை முஸ்லிம் காங்­கிரஸ் முற்­றாக எதிர்க்­கின்­றது. கணக்­கெ­டுப்பில் எந்­த­வொரு உண்மைத் தன்­மை­யு­மில்லை என முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஹசன் அலி தெரி­வித்­துள்ளார்.
இது தொடர்­பாக அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,
கடந்த முப்­பது வருட கால கொடிய யுத்­தத்தில் ஏற்­பட்ட உயி­ரி­ழப்­புகள், பாதிக்­கப்­பட்­ட­வர்கள், சொத்து சேதங்கள் தொடர்பில் புள்­ளி­வி­ப­ர­வியல் திணைக்­க­ளத்தின் கணக்­கெ­டுப்பில் எவ்­வி­த­மான திருப்தியுமில்லை.
இவை தொடர்பில் மக்கள் அதி­க­ள­வி­லான முறைப்­பா­டு­களை முன் வைத்­துள்­ளனர். யுத்த பாதிப்­புக்கள் தொடர்பில் கணக்­கெ­டுப்­பொன்று அவ­சி­ய­மா­னதே. அதை அர­சாங்கம் கட்­டா­ய­மாக செய்ய வேண்டும். ஆனால் தற்­போது புள்­ளி­வி­ப­ர­வியல் திணைக்­க­ளத்தின் கணக்­கெ­டுப்பில் எவ்­வி­த­மான வெளிப்­ப­டை­யான தன்­மை­க­ளு­மில்லை.
கணக்­கெ­டுப்பு தொடர்பில் கொடுக்­கப்­படும் பத்­தி­ரத்­தினை புள்ளி விப­ர­வியல் திணைக்­கள அதி­கா­ரி­களே நிரப்­பு­வ­தா­கவும் பொது மக்­களின் உண்மை விப­ரங்­களை கருத்தில் கொள்வதில்லை எனவும் அதிக முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெற்­றுள்­ளன.
அதேபோல் இவ் புள்­ளி­வி­ப­ர­வியல் கணக்­கெ­டுப்­பினை எவ­ரது தனிப்­பட்ட தேவை­க­ளுக்­கா­கவோ அல்­லது சர்­வ­தே­சத்தின் அழுத்­தங்­களை சமா­ளிக்கும் நோக்கில் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றதா என்ற சந்­தே­கமும் எமக்­குள்­ளது.
எவ்­வித உண்மைத் தன்­மை­க­ளு­மில்­லாத ஒரு செயற்­பா­டு­க­ளுக்கு ஆத­ரவு தெரி­வித்து மக்­களை ஏமாற்ற நாம் விரும்­ப­வில்லை. இவ் மூடு மந்­தி­ரத்தின் பின்­ன­ணி­யினை அர­சாங்கம் உட­ன­டி­யாக நிவர்த்தி செய்ய வேண்டும். இல்­லையேல் வேறு வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுக்க வேண்­டிய நிலை ஏற்­ப­டக்­கூடும்.
மேலும் அர­சாங்­கத்தில் இருக்கும் ஒரு சில பௌத்த பேரி­ன­வா­தி­களின் செயற்­பா­டு­களின் கார­ணத்­தி­னா­லேயே சிறு­பான்மை மக்கள் விரக்­தி­ய­டைந்­துள்­ளனர். சிறு­பான்மை மக்­க­ளையும் சேர்த்து பாதுகாக்க வேண்­டு­மென்­பதன் கார­ணத்­தி­னா­லேயே மக்கள் அர­சாங்­கத்­தினை தெரிவு செய்­கின்­றனர். ஆனால் அதைப் புரிந்து கொள்­ளாத அர­சாங்­கத்­தினர் தொடர்ந்தும் சிறு­பான்மை மக்­களை துன்­பு­றுத்தி வரு­கின்­றனர்.
நாட்டில் சிங்­கள மக்­களின் மனதில் பிரி­வினைவாதமோ சிறு­பான்மை மக்கள் மீதான தனிப்­பட்ட விரோ­தங்­களோ இல்லை. நாட்டில் மூவின மக்­களும் ஒற்­று­மை­யாக வாழவே விரும்­பு­கின்­றனர். ஆனால் ஒரு சில பெருத்த தலை­மை­களின் அர­சியல் இலா­பத்தின் கார­ண­மா­கவே நாட்டில் பிரி­வி­னை­வா­தத்­தினை தூண்டி நாட்டில் குழப்­ப­கரமான சூழ­லினை ஏற்­ப­டுத்­து­கின்­றனர்.
சிங்­க­ள­வர்­களை அடக்கி சிறு­பான்­மை­யினர் ஆட்சி நடத்த முடி­யாது என்­ப­தனை தெரிந்து கொண்டும் தமிழர் முஸ்­லிம்­களை நோக­டிப்­ப­தா­னது மனித உரிமை மீறல்­க­ளா­கவே கரு­தப்­பட வேண்டும்.
கொழுத்த பூனை எலி­யுடன் விளை­யாடி எலியை துன்­பு­றுத்­து­வதைப் போல் பெரும்­பான்­மை­யான மக்கள் சகல உரி­மை­க­ளையும் சுதந்­தி­ரத்­தி­னையும் அனு­ப­விக்கும் அரசியல் சூழல் ஏற்பட்டிருந்தும் சிறுபான்மை மக்களை சீண்டிப்பார்த்து இன்பம் காணும் நிலைமையே ஏற்பட்டுள்ளது.
மேலும் வடக்கு கிழக்கினை ஒன்றிணைத்து தனி இராச்சியத்தினை அமைக்க வேண்டிய தேவை எமக்கில்லை. ஒரு சிலரின் பிரிவினைப் பேச்சுக்களை கேட்டு ஜனாதிபதி சிறுபான்மை மக்களை நிராகரித்து விடக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post Top Ad