கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் சீரற்ற காலநிலை நீடிக்கும் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, December 03, 2013

கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் சீரற்ற காலநிலை நீடிக்கும்


கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் பல பாகங்களில் நிலவி வரும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.கிழக்கு மாகாணத்தில் இடியுடன் கூடிய மழை பெய்வதுடன்இ வடக்குஇ ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் மழை பெய்யக் கூடுமென அத்திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது

.இடியுடன் கூடிய மழையானது பிற்பகல் அல்லது இரவு வேளையில் பெய்யும் என்றும்இ சில பகுதிகளில் 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகலாமென்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும்போது கடும்காற்று வீசும் என்று குறிப்பிட்டிருக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்இ மின்னல் தாக்கம் குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென எச்சரித்துள்ளது. 

No comments:

Post Top Ad