அமைச்சர் ரெஜினோல் குரேயின் மகள் மரணம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, December 04, 2013

அமைச்சர் ரெஜினோல் குரேயின் மகள் மரணம்


சிறு ஏற்றுமதிப் பயிர்கள் ஊக் குவிப்பு அமைச்சர் ரெஜினோல் குரேயின் மகள் நேற்று திடீரென மரணமடைந்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளரான இவர் விரிவுரையாற்றிக்கொண்டிருக்கையில் திடீரென மயங்கி விழுந்துள்ளதோடு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது.


மெய்யியல் முதுமாணிப் பட்டத்திற்கு தயாராகி வரும் இவர்இ அது தொடர்பான பரீட்சைக்காக சம்பவ தினம் விரிவுரை நிகழ்த்தியுள்ளார்.

திடீரென நினைவிழந்து விழுந்த இவர் கொழும்பு பெரியாஸ்பத்திரி அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகையில் நேற்று அதிகாலை மரணமடைந்தார். 35 வயதான இவர் 3 பிள்ளைகளின் தாயாராவார்.

இவரின் இறுதிக் கிரியைகள் நாளை 5ஆம் திகதி கடுகுருந்தவில் நடைபெறும். 

No comments:

Post Top Ad