பேஸ்புக்கில் சிறைக் கைதிகளின் புகைப்படங்கள் கேரள உள்துறை மந்திரி விசாரணை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, December 03, 2013

பேஸ்புக்கில் சிறைக் கைதிகளின் புகைப்படங்கள் கேரள உள்துறை மந்திரி விசாரணை


குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயில்கள் தற்போது உல்லாச விடுதிகளாக மாறி வருவதாக கேரள அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வந்தனர்.


குறிப்பாக விசாரணை கைதிகளாக இருப்பவர்களுக்கு ஜெயிலில் எந்த கட்டுப்பாடும் இல்லை என்றும் அவர்கள் அங்கிருந்தபடி அனைத்து விதமான சவுகரியங்களையும் அனுபவிப்பதாகவும் புகார்கள் எழுந்தது.
இதை மாநில அரசு மறுத்து வந்த நிலையில் நேற்று மலையாள தொலைக்காட்சியொன்றில் கோழிக்கோடு மாவட்ட ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் சில கைதிகள் ஜெயிலில் தங்களுடன் இருப்பவர்களுடன் ஜாலியாக செல்போனில் சிரித்து பேசியபடி இருந்த காட்சிகள் வெளியானது.

இந்த காட்சிகள் அந்த கைதிகளின் பெயரில் தொடங்கப்பட்ட பேஸ்புக்கில் இருந்து எடுக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு அந்த அளவுக்கு சவுகரியங்கள் ஜெயிலில் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

டெலிவிஷனில் வெளியான காட்சிகள் கோழிக்கோடு ஜெயிலில் எடுக்கப்பட்டவை. அந்த புகைப்படங்களில் இருந்தவர்கள் கோழிக்கோடு சந்திரசேகரன் கொலை வழக்கில் கைதான குற்றவாளிகள் கிர்மானி மனோஜ், கொடி சுனி, முகமது ஷாபி, அனுப், சினோஜ் ஆகியோர் இருந்தனர்.

முகம்மது ஷாபி செல்போனில் பேசியபடி இருக்கும் காட்சியும், கிர்மானி, அனுப் ஆகியோர் ஜெயிலில் உள்ள மற்ற கைதிகளுடன் ஜாலியாக எடுத்துக்கொண்ட குரூப் போட்டோவும், ஷாபி, கிர்மானி ஆகியோர் பெர்முடா அணிந்த படி ஜெயில் சுவரில் சாய்ந்து நிற்கும் காட்சியும் இருந்தன.

இந்த படங்கள் செல்போன் காமிராவில் பதிவு செய்யப்பட்டு பின்னர் அது பேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த படங்கள் வெளியானதும் கேரள ஜெயில் அதிகாரிகள் மற்றும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். ஜெயிலுக்குள் போன் பேசுவதே தவறு என்ற நிலையில் அங்கிருந்தபடி செல்போன் மூலம் படம் எடுத்து அதனை எப்படி பேஸ்புக்கில் ஏற்றினார்கள் என்று ஜெயில் உயர் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக உடனடி விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு ஜெயில் துறை டி.ஜி.பி.சிவதாஸ் உத்தரவிட்டார். இதையடுத்து ஏ.டி.ஜி.பி. அலெக்சாண்டர் ஜேக்கப் கோழிக்கோடு ஜெயிலுக்கு சென்று விசாரணை நடத்தினார்.

மேலும் இச்சம்பவம் பற்றி கேரள உள்துறை மந்திரியிடமும் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் இன்று கோழிக்கோடு ஜெயில் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த இருப்பதாகவும், இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பதை கண்டுபிடித்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post Top Ad