கஞ்சா வைத்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது பொத்துவிலில் சம்பவம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, December 01, 2013

கஞ்சா வைத்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது பொத்துவிலில் சம்பவம்

(ad)

பொத்துவில் நகரில் கஞ்சா போதைப் பொருளை விற்பனைக்காக கொண்டுவந்த மொனராகலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை இன்று (01) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 2 2/1 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளும் மீட்கப்பட்டதாக பொத்துவில் பொலிசார் தெரிவித்தனர். 


பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து பொத்துவில் நகரில் சம்பவதினமான இன்று காலை 4 மணிக்கு பொலிசார் சுற்றிவளைத்து சோதனையின்போது 2 2/1 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளுடன் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்துள்ளனர். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் மொனராகலை பிரதேசத்தில் இருந்து பொத்துவில் பிரதேசத்துக்கு விற்பனைக்காக கஞ்சா கொண்டுவந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

இது தொடர்பான விசாரணைகளை பொத்துவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 

No comments:

Post Top Ad