வெள்ளை மாளிகையில் மிகப்பெரிய எயிட்ஸ் ரிப்பன் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, December 03, 2013

வெள்ளை மாளிகையில் மிகப்பெரிய எயிட்ஸ் ரிப்பன்


உலக எய்ட்ஸ் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். எய்ட்ஸ் தினத்தை எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. எய்ட்ஸ் தினத்தை அனுசரிக்கும் மையக்கரு முதன்முதலாக 1988-ல் நடைபெற்ற எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் தான் உருவானது. 


அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

1981-ஆம் ஆண்டிலிருந்து 2007-ஆம் ஆண்டு வரை எய்ட்ஸ் நோயால் இறந்தவரின் எண்ணிக்கை இரண்டரை கோடிக்கு மேல் என்பது நினைவிருக்கலாம். 2007-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி மட்டும் சுமார் மூன்றரை கோடி மக்கள் இந்நோயுடன் வாழ்ந்து வருகின்றனர். இதனால் மானிட வரலாற்றிலேயே மிக கொடூரமான தொற்றுநோயாக எய்ட்ஸ் கருதப்படுகிறது. சமீபத்திய சிகிச்சை முறைகளின் முன்னேற்றம் மற்றும் கண்காணிப்பின் கீழ் இருந்தும், எய்ட்ஸ் நோயால் உலகெங்கிலும் 2007-ஆம் ஆண்டில் 20 லட்சம் உயிரிழப்பு ஏற்பட்டது. இவர்களில் 2,70,000 குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த ஆண்டின் எய்ட்ஸ் தினத்தை அந்நோய் தொடர்பான விழிப்புணர்வினை மக்கள் பெறும் வகையில் உலக நாடுகள் அனைத்தும் சிறந்த முறையில் பிரசாரம் செய்தன. எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பான கலை நிகழ்ச்சிகள், பொது இடங்கள் மற்றும் ஊடங்களில் வாயிலாக பரவலாக பிரசாரமும் செய்யப்பட்டது.

இதனையொட்டி, வாஷிங்டன் நகரில் உள்ள அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையின் வாசலில் கட்டப்பட்டிருந்த பிரமாண்ட "எய்ட்ஸ் ரிப்பன்" உலக ஊடங்களின் கவனத்தை சுண்டி இழுக்கும் வகையில் அமைந்திருந்தது.

No comments:

Post Top Ad