கல்லடியில் அட்டகாசம் புரிந்த யானை வனவிலங்கு அதிகாரிகளினால் பிடிக்கப்பட்டது - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, December 18, 2013

கல்லடியில் அட்டகாசம் புரிந்த யானை வனவிலங்கு அதிகாரிகளினால் பிடிக்கப்பட்டது

(tm)

கல்லடி 6ஆம் கட்டைப் பிரதேசத்தில் அட்டகாசம் புரிந்துவந்த காட்டு யானைகளில் ஒரு  காட்டு யானையை  மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் வனவிலங்கு அதிகாரிகள் நேற்று  பிடித்துக் கட்டியுள்ளனர். 


கல்லடி, கொட்டுக்கச்சி, பளுகஸ்வௌ, தங்கஸ்வெவ, கட்டுவ உள்ளிட்ட பல பிரதேசங்களிலும்  பிடிக்கப்பட்டுள்ள யானையுடன் சுமார் 10  யானைகள் கூட்டமாகச் சென்று கடந்த 03 மாதங்களாக அட்டகாசங்கள் புரிந்துவந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.  சுமார் 600 தென்னைமரங்களையும் மாமரங்களையும் மேற்படி யானைகள் முறித்து சேதப்படுத்தியுள்ளதாகவும் பிரதேச மக்கள் கூறினர். 

இந்த நிலையிலேயே வனவிலங்கு அதிகாரிகள் மேற்படி காட்டு யானையை மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் பிடித்துள்ளனர்.

No comments:

Post Top Ad