கட்டுநாயக்க சிறுவர்களை பாலியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திய தேரர் கைது - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, December 06, 2013

கட்டுநாயக்க சிறுவர்களை பாலியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திய தேரர் கைது

(vi)

கட்டுநாயக்க அமந்தலுவ பகுதியில் சிறுவர்களை பாலியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு பௌத்த தேரர் ஒருவர் பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
 
அமந்தலுவே சீலரத்ன என்ற 31 வயதுடைய தேரரே சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டதாக சீதுவை பொலிஸார் தெரிவித்தனர்.
 
அப்பகுதியில் வசித்துவரும் தரம் 7 இல் கல்வி பயிலும் 12 வயதுடைய சிறுவர்கள் நால்வரை இந்த சந்தேக நபர் தகாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
 
இதனடிப்படையில் புலனாய்வுகளை மேற்கொண்ட பொலிஸார் பிக்கு தங்கியிருந்த வீட்டினை சுற்றிவளைத்து அவரைக் கைது செய்துள்ளனர்.
 
சந்தேக நபர் நீண்ட காலமாக சிறுவர்களுடன் பாலியல் தொடர்பினைக் கொண்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்ததுடன் அவரை இன்று நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post Top Ad