நீர்தடாகத்தில் சடலமாக கிடந்த சவுதி நாட்டவர் மாரடைப்பினாலேயே இறந்தார் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, December 02, 2013

நீர்தடாகத்தில் சடலமாக கிடந்த சவுதி நாட்டவர் மாரடைப்பினாலேயே இறந்தார்

(sfm)

கொழும்பு - பம்பலபிட்டிய சொகுசு மாடி வீட்டுத் தொகுதியின் நீர் தடாகத்தில் இருந்து நேற்று மாலை வெளிநாட்டு ராஜதந்திரி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.


இலங்கைக்காக சவுதி அரேபிய தூதரகத்தில் பணிபுரியும் கணக்காய்வு அதிகாரியே சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் றோகன  தெரிவித்தார்.

நீராடச் சென்ற போது அவர் மாரடைப்பால் மரணமானதாகவும், சடலம் பம்பலபிட்டியில் உள்ள தனியார் மருத்துமைனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மரணவிசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளன.

No comments:

Post Top Ad