தடையை மீறி கட்டுநாயக்க அதிவேக வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ரஸ்ய பிரஜை கைது - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, December 02, 2013

தடையை மீறி கட்டுநாயக்க அதிவேக வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ரஸ்ய பிரஜை கைது

(ad)

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ரஸ்ய நாட்டுப் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார். 


இவர் இன்று (02) காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஆஜித் ரோஹன தெரிவித்தார். 

கட்டுநாயக்க அதிவேக வீதியின் 18ம் கட்டை நுழைவாயிலில் மோட்டார் சைக்கிளில் பயணித்து 6ம் கிலோ மீற்றர் பகுதியில் குறித்த ரஸ்ய பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார். 

இதேவேளை, தெற்கு அதிவேக வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் வேனுடன் மோதுண்டு படுகாயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இச்சம்பவம் நேற்று (01) காலை இடம்பெற்றது. 

கொழும்பு - கட்டுநாயக்க மற்றும் தெற்கு அதிவேக வீதியில் மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி, டிரக்டர் மற்றும் துவிச்சக்கர வண்டியில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அதனையும் மீறி செல்பவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

No comments:

Post Top Ad