பாகிஸ்தானில் பாதுகாப்பு திருப்தியாக இருந்தால் இலங்கை அணி பாகிஸ்தானில் விளையாடும் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, December 22, 2013

பாகிஸ்தானில் பாதுகாப்பு திருப்தியாக இருந்தால் இலங்கை அணி பாகிஸ்தானில் விளையாடும்

(sfm)

பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலவரங்கள் திருப்திகரமாக இருந்தால், இலங்கையின் கிரக்கட் அணி அங்கு சுற்றுலா போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிறிலங்கா கிரிக்கட்டின் அறிக்கை ஒன்றை மேற்கோள்காட்டி, பாகிஸ்தானிய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.

2009ம் ஆண்டு பாகிஸ்தான் - லாஹூரில் இடம்பெற்ற இலங்கை கிரிக்கட் அணி மீதான தாக்குதலைத் தொடர்ந்து, அங்கு எந்த கிரிக்கட் அணியும் சென்றிருக்கவில்லை.

இந்த நிலையில் பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலவரங்கள் திருப்திகரமாக இருந்தால், இலங்கை கிரிக்கட் அணியை அங்கு அனுப்ப தயாராக இருப்பதாக சிறிலங்கா கிரிக்கட் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கட் தரப்புகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை ஒன்றுக்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post Top Ad