முஸ்லிம்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறைகள் மீண்டும் அடையாள அட்டை ரூபத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது - - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, December 15, 2013

முஸ்லிம்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறைகள் மீண்டும் அடையாள அட்டை ரூபத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது -


இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறைகள் மீண்டும் அடையாள அட்டை ரூபத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது - மட்டு மாநகர சபை முன்னால் உறுப்பினர் றழ்ழான்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

தேசிய அடையாள அட்டையில் முஸ்லிம்களின் கலாச்சார அடையாளத்தை மாற்ற முனைவதை   ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் உறுப்பினர் என்.கே.றழ்ழான் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் அண்மைக் காலமாக பல்வேறுபட்ட வழிகளில் இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறைகள் அதிகரித்து வருகின்றது ஹலால் சான்றிதழில் தொடங்கி பார்தாவை கழட்டுதல் வரையும் அரங்கேறி ஒருவகையாக தணிந்து இருந்த முஸ்லிம்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறைகள் மீண்டும் அடையாள அட்டை ரூபத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது இவ்வாறு சிறு சிறு விடயங்களாக முஸ்லீம்களை இன அடக்குமுறைகளுக்கு உட்படுத்தி வருகின்றனர்.
  
காவிவுடை பயங்கரவாதத்தைபயண்படுத்தி முஸ்லீம்களின் மத கலாச்சார மற்றும் பொருளாதார விடயங்களை அடக்கியொடுக்க முட்பட்டு முடியாமல் போனதால் முஸ்லிம்களின் அடையாளத்தை இந்த நாட்டிலிருந்து முழுமையாக மறைக்க இன்று அரச அதிகாரிகளைபயன்படுத்தி நிறைவேற்ற எத்தணிக்கின்றனர் இதனை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. 

இந்த நாட்டில் முஸ்லிம்கள் தங்களுடைய மத காலச்சாரத்தை பிரதிபலிக்கும் தொப்பியுடனோ பார்தாவுடனோ அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியாது என்று கூறுகின்ற ஆட்பதிவுத் திணைக்களம் பௌத்தர்களின் விடயத்திலும் பௌத்த மத குருமார்கள் அவர்களின் கலாச்சார ஆடையுடன் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியாது என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் இந்த நாட்டில் பௌத்த குருமார்கள் தங்களது கலாச்சார காவியுடையுடன் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியுமாக இருந்தால் ஏன் ஒரு முஸ்லிம் மதகுரு தன்னுடைய தொப்பியுடன் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியாது இன்று அடையாள அட்டைக்கு தொப்பியுடனும் பர்தாவுடனும் விண்ணப்பிக்க முடியாது என்று கூறுகின்றவர்கள் நாளை கடவுச் சீட்டுக்கும் இந்த சட்டத்தை கொண்டு வர மாட்டார்கள் என்பதில் என்ன உத்தரவாதம் இருக்கின்றது 

இவ்வாறு படிப்படியாக இந்த நாட்டு முஸ்லிம்களின் மத உரிமைகள் சட்டம் என்ற போர்வையில் திட்டமிட்டுப் பறிக்கப்பட்டு வருகின்றது .

கடந்த பிறிட்டிஸ் காலானித்துவ ஆட்சிக் காலத்தின் போது முஸ்லிம்கள் தொப்பியணிந்து நீதி மன்றத்திற்கு வரமுடியாது என்ற தடுத்தபோது அதனை முதல் முஸ்லிம் சட்டத்தரணியான எம் சீ அப்துல் காதர் அவர்கள் நீதிமன்றதில் வாதாடி கடந்த 1905ம் ஆண்டு பெற்றுக் கொடுத்தமுஸ்லிம்களின் உரிமையை இன்று எவரும் பறித்தெடுப்பதற்கு இடமளிக்க முடியாது அன்று ஒரு தனிமனிதனாக நீதிமன்றத்தில் தொப்பிக்காக வாதிட முடியுமாக இருந்தால் ஏன் இன்று பட்டாளமாக பாராளுமன்றத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களால் வாதிட்டு தடுத்து நிறுத்த முடியாது.

இந்த நாட்டு முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தங்களது நியாயங்களையும் தேவைகளையும் நேரடியாக பாராளுமன்றத்தில் சென்று வாதிட முடியாது என்பதனாலே உங்களை அவர்களது வக்கீலாக பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைத்தனர் என்பதை எந்தவொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் மறந்து விடக் கூடாது இதனை ஒரு சிறு விடயமாக கருதி பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌனம் சாதிக்கக் கூடாது எனவும் தெரிவித்தார்

No comments:

Post Top Ad