நாமால் ராஜபக்ஷ பேபியை சுமக்கின்றீர்கள். நீங்கள் பேபி அஸ்வர் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, December 04, 2013

நாமால் ராஜபக்ஷ பேபியை சுமக்கின்றீர்கள். நீங்கள் பேபி அஸ்வர்


ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் குழந்தைகளை தூக்கி சுமக்கும் பேபி அஸ்வர் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஹரின் பெர்ணான்டோ, பிரித்தானிய பிரஜையான குராம் ஷேக்கின் கொலை தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது அஸ்வர் குறுக்கிட்டார். இதனையடுத்து அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
குராம் ஷேக்கின் காதலியான ரஷ்ய பெண் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அமைச்சர் ஒருவர் அந்த பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என கூறுகிறார் என்றார்.
இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வர் குறுக்கிட்டார். அப்பொழுது பேசிய ஹரின் பெர்ணான்டோ,
அஸ்வர் .... நீங்கள் உட்காருங்கள்... உங்களது வேலை அரசாங்கத்திற்கு ஜால்ரா போடுவதுதானே... நாடாளுமன்றத்தில் ஒரு மூலையில் அமர்ந்து அதனை தானே செய்கிறீர்கள்....
நீங்கள் காலத்திற்கு காலம் பேபிகளை தூக்கி சுமப்பவர்... முன்னர் சஜித் பிரேமதாச என்ற பேபியை சுமந்த நீங்கள், தற்பொழுது நாமால் ராஜபக்ஷ பேபியை சுமக்கின்றீர்கள். நீங்கள் பேபி அஸ்வர் என்றார்.

No comments:

Post Top Ad