மனைவியை மீட்ககோரி உண்ணாவிரதம் இருந்தவர் கைவிட்டார் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, December 14, 2013

மனைவியை மீட்ககோரி உண்ணாவிரதம் இருந்தவர் கைவிட்டார்

(tm)

வெளிநாட்டிற்கு பணிப்பெண்ணாக சென்றுள்ள தனது மனைவியை மீட்டுத்தருமாறு கோரி வியாழக்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவந்த அந்த பெண்ணின் கணவர் தனது உண்ணாவிரத போராட்டத்தை இன்று காலை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.


திருகோணமலை, புல் மோட்டையைச் சேர்ந்த சேர்ந்த அபூபக்கர்- முகமட் ரபீக் என்ற நபர் வெளிநாட்டிலுள்ள தனது மனைவியை மீட்டுத்தருமாறு கோரி கடந்த வியாழக்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

இவருடன் இவரது முன்று பிள்ளைகளான  பாத்திமா முபிசா (வயது-10) தரம்-5, முகம்மது வசீம் (வயது-8) தரம்- 4,  முகம்மது ரொசான் (வயது-3 ) ஆகியோரும் உண்ணாவிரத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடரந்து குச்சவெளி பிரதேச சபைத்தவிசாளர் ஏ.முபாறக், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர், அரச அதிகாரிகளை சந்தித்து மேற்படி விவகாரம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதுடன்  அவரது மனைவியை மீட்டுத்தருவதற்கு உரிய நடவடிக்கைக்களை மேற்கொள்வதாக அவர் உறுதியளித்துள்ளார்.

இதனையடுத்தே உண்ணாவிரத போராட்டம்  நிறைவுக்குகொண்டு வரப்பட்டுள்ளது.

No comments:

Post Top Ad