மங்கள சமரவீரவின் வீட்டில் ஆவனங்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, December 31, 2013

மங்கள சமரவீரவின் வீட்டில் ஆவனங்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு

(tm)


ஐக்கிய தேசியக்கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவின் வீட்டில் திருடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


பாணந்துறை,கெசல்வத்தையிலுள்ள வீட்டிலிருந்த ஆவணங்களே திருடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

வீட்டின் மேல்மாடியில் கூரையை பிரித்துகொண்டு உள்நுழைந்தே இந்த ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாகவும் மேசையிலிருந்த ஆவணங்களையும் காணவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை பகல் வேளையிலேயே இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையிலும் எவரும் கைது செய்யப்படவில்லை என்று தெரிவித்த பொலிஸார், வீட்டில் திருடப்பட்டதன் பின்னர்  மங்கள சமரவீர அந்த வீட்டுக்கு வருகைதரவில்லை என்றும் தெரிவித்தனர்.

No comments:

Post Top Ad