லெபனான் மீது இஸ்ரேல் எறிகணை தாக்குதல் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, December 30, 2013

லெபனான் மீது இஸ்ரேல் எறிகணை தாக்குதல்


தென் லெபனான் பகுதியை குறி வைத்து மூன்று எறிகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
அந்த பிரதேசத்தில் இருந்து தமது பிரதேசத்திற்கு எறிகணை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதற்கு பதில் நடவடிக்கையாகவே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

எனினும் தம்மால் மேற்கொண்ட தாக்குதலில் லெபனானியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என இஸ்ரேலிய இராணுவ வானொலி குறிப்பிட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் இஸ்ரேலிய சிப்பாய் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதனை அடுத்து, இரண்டு லெபனான் துருப்பினர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவங்களை அடுத்தே இரு தரப்பினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.
இதேவேளை, 2006ஆம் ஆண்டு 34 நாட்களாக இடம்பெற்ற யுத்தத்தை அடுத்து, இரு நாட்டு எல்லை பகுதியில் ஐக்கிய நாடுகளில் படையணியினர் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.
இந்த மோதலின் போது 1125யிற்கும் மேற்பட்ட லெபனான் பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 119 இஸ்ரேலிய துருப்பினரும் 45 பொதுமக்களும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad