முதலமைச்சர் வேட்பாளராக யாரை நிறுத்துவது ? ஐ.தே.கட்சிக்குள் சர்ச்சை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, December 25, 2013

முதலமைச்சர் வேட்பாளராக யாரை நிறுத்துவது ? ஐ.தே.கட்சிக்குள் சர்ச்சை


மேல் மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பில் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது.
கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்க, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறப்பினர் ஹர்ஷ டி சில்வாவை நிறுத்த உத்தேசித்துள்ளார்.

எனினும், இந்த்த் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், ஹர்ஷ டி சில்வாவை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கும் தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது என ரணில் தெரிவித்துள்ளார்.
இது தெடர்பில் கட்சியின் தலைமைத்துவ பேரவைக்கும் அறிவித்துள்ளார்.

No comments:

Post Top Ad