வாழைச்சேனையில் புதைபொருள் தேடும் கருவிகளுடன் நால்வர் கைது - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, December 16, 2013

வாழைச்சேனையில் புதைபொருள் தேடும் கருவிகளுடன் நால்வர் கைது


புதைபொருள் தேடும் கருவிகளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் இன்று திங்கட்கிழமை வாழைச்சேனை நகரில் கைது செய்யப்படும் பொழுது அவர்கள் வசம் ஒரு முச்சக்கர வண்டியும் புதைபொருள் தேடுதலுக்குப் பயன்படுத்தப்படும் கருவிகளும் இருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவர் அம்பலாங்கொடையைச் சேர்ந்தவர், இன்னொருவர் வாழைச்சேனை கிண்ணையடியைச் சேர்ந்தவர், ஏனைய இருவரும் திருகோணமலையைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
அம்பலாங்கொடையைச் சேர்ந்த நபர் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் என்றும், இவர் அம்பாறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர் என்றும் தெரிய வந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறினர்.

No comments:

Post Top Ad