எட்வர்டு ஸ்னோடென் நாடு திரும்ப வேண்டும் ! அமெரிக்கா வலியுறுத்து - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, December 18, 2013

எட்வர்டு ஸ்னோடென் நாடு திரும்ப வேண்டும் ! அமெரிக்கா வலியுறுத்து


அமெரிக்க இராணுவ ரகசியங்களை உலகிற்கு அம்பலப்படுத்திய எட்வர்டு ஸ்னோடென் நாடு திரும்ப வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏவில் பணியாற்றிய எட்வர்டு ஸ்னோடென், இராணுவ ரகசியங்களை வெளியிட்டார்.

இதனால் அமெரிக்கா கைது செய்யும் சூழ்நிலை உருவானதால் ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இந்நிலையில், ஸ்னோடன் நாடு திரும்பினால் அவருக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என சிலர் கருத்து தெரிவித்தனர்.
ஷஇதனை மறுத்துள்ள வெள்ளை மாளிகை, ஸ்னோடென் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
மேலும் இதுகுறித்து செய்தித் தொடர்பாளர் ஜே காமி கூறுகையில், ஸ்னோடென் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஏற்று, அவர் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை சந்திக்க வேண்டும்.
இவரது விவகாரத்தில் ஜனாதிபதி ஒபாமாவின் மனநிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
ஸ்னோடன் பொதுமன்னிப்பு குறித்து தக்க தருணத்தில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஸ்னோடனுக்கு அடைக்கலம் அளித்த விவகாரத்தில் ரஷ்யா, அமெரிக்கா இடையேயான உறவுகள் தொடர்ந்து மோசமான நிலையில் உள்ளன.

No comments:

Post Top Ad