முஸ்லிம் இளைஞரை கொலை செய்த வாஸ் குணவர்தன வைத்தியசாலையில் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, December 02, 2013

முஸ்லிம் இளைஞரை கொலை செய்த வாஸ் குணவர்தன வைத்தியசாலையில்


கொழும்பு பம்பலப்பிட்டியை சேர்ந்த கோடிஸ்வரரான வர்த்தகர் மொஹமட் ஷியாம் என்பவர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
சிறைச்சாலை வைத்தியசாலையில் அவர் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலை அதிகாரிகள் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தினர்.
ஷியாம் கொலை வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட பொழுது சம்பவம் தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணனி பிரிவு வழங்கிய அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
கொலை சம்பவத்துடன் தொடர்புடைய ரவிந்து குணவர்தன உட்பட 6 சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்தனர்.

No comments:

Post Top Ad