பின்தங்கிய பாடசாலைகளுக்கு நாடாளாவிய ரீதியில் கணனி ஆய்வுக்கூடங்களை நிறுவும் திட்டம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, December 06, 2013

பின்தங்கிய பாடசாலைகளுக்கு நாடாளாவிய ரீதியில் கணனி ஆய்வுக்கூடங்களை நிறுவும் திட்டம்


பின்தங்கிய பாடசாலை மாணவர்கள் மத்தியில் தகவல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்கில் நாடாளாவிய ரீதியில் கணனி ஆய்வுக்கூடங்களை நிறுவும் திட்டம் நேற்று (05)  மாலை ஆரம்பமானது. கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இவ்வாரம்ப வைபத்தின் போது பாதுக்க வட்டரக்க கனிஷ்ட வித்தியாலயத்தில் முதலாவது கணனிக்கூடம் திறந்து வைக்கப்பட்டது.


சர்வதேச தொலை தொடர்புகள் சங்கம்- இலங்கை தொலைதொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுடன் இணைந்து ஆரம்பித்துள்ள இத்திட்டத்தின் கீழ் இலங்கையின் 25 மாவட்டங்களிலுள்ள 25 பாடசாலைக்கும் பெருந்தோட்டப்பகுதியிலுள்ள 8 பாடசாலைகளுக்கும் கணனி ஆய்வுக்கூடங்கள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன.

சுமார் 288 மில்லியன் செலவில் ஆரம்பிக்கப்படவுள்ள இத்திட்டத்தினால் கிராமபுர பாடசாலைகளிலுள்ள மாணவர்கள் இணையதளத்தில் பிரவேசித்து கல்விக்குத் தேவையான தகவல்களை சேகரிக்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாரம்ப வைபவத்தில் ஜனாதிபதி செயலாளர் - தொலைதொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் - லலித் வீரதுங்க- கல்வி அமைச்சின் செயலாளர் சர்வதேச தொலை தொடர்புகள் சங்கத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய தலைவர் யூன் நூ கிம் உட்பட பல உயரதிகாரிகள்- அமைச்சின் செயலாளர்கள்- பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசியரியர்கள் கலந்துகொண்டனர்.No comments:

Post Top Ad