விடுதலைப் போராட்ட வீரர் நெல்சன் மண்டேலா காலமானார் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, December 06, 2013

விடுதலைப் போராட்ட வீரர் நெல்சன் மண்டேலா காலமானார்


தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா தனது 95வது வயதில் மரணமடைந்துள்ளதாக அந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா அறிவித்துள்ளார்..

நெல்சன் மண்டேலா கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். அவருக்கு வயது 95.
சில நாட்களுக்கு முன்னர் அவரது மகள் மகஸிவே மண்டேலா, நெல்சன் மண்டேலா அவரது மரணப்படுக்கையில் மிகவும் தைரியமான ஒரு போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் என்று கூறியிருந்தார்.
தற்போது அவர் மரணம் அடைந்துவிட்டார் என அந்நாட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மண்டேலாவின் மறைவிற்கு ஐ.நா., வின் பொது செயலாளர் பான்-கி-மூன் ,அமெரிக்க அதிபர் ஒபாமா, முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post Top Ad