உலகிலேயே எயிட்ஸில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, December 01, 2013

உலகிலேயே எயிட்ஸில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம்


இன்று உலக எயிட்ஸ் தினம். உலகிலேயே இரண்டாவது இடத்தில் இந்தியாவில் எச்ஐவி மற்றும் எயிட்ஸ் நோயாளிகள் உள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் இதன் என்னிக்கை நான்கு மடங்காக உயர்ந்துள்ளது.
எயிட்ஸ் நோயை உருவாக்கும் எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்று (டிசம்பர் 01) சர்வதேச எயிட்ஸ் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.


இது தொடர்பில் சுகாதார அமைச்சினால் நாடு முழுவதிலும் விழிப்பணர்வு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பற்ற உடலுறவுஇ மருத்துவ சிகிச்சை அல்லது ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் தூய்மையற்ற ஊசிகள்இ தாய்ப்பால்இ குழந்தை பிறப்பின் போது தாயிலிருந்து சேய்க்கு கடத்தப்படுதல் போன்ற பிரதான வழிகளில் எச்.ஐ.வி ஒருவரிலிருந்து மற்றொருவருக்கு தொற்றுகிறது.

இன்றைய நாளில் நடத்தப்படும் எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வு சிறப்பு நிகழ்வுகளில் பங்கேற்றுஇ இந்நடவடிக்கைக்கு உங்கள் ஆதரவை தெரிவிக்கலாம்.
எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இல்லத்திற்கு சென்று நன்கொடைகள் வழங்கலாம்.
எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறிஇ அவர்களது நீண்ட காலம் வாழ்வதற்குரிய நம்பிக்கையை ஏற்படுத்தலாம்.

No comments:

Post Top Ad