குளிரால் அவதிப்படும் சிரியா மக்களின் அவல நிலை (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, December 18, 2013

குளிரால் அவதிப்படும் சிரியா மக்களின் அவல நிலை (படங்கள் இணைப்பு)


சிரியா உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டு அகதிகளாக தஞ்சமடைந்துள்ளவர்கள், தற்போது கடும் குளிரால் அவதிப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு ஆரம்பான போராட்டம் இன்றளவும் நீடித்துக் கொண்டிருக்கிறது.

மக்கள் தொகையில், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மக்கள் தற்போது அகதிகளாக லெபனானில் தஞ்சமடைந்துள்ளனர்.
லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கில் உள்ள அர்சால் என்ற இடத்தில்தான் இவர்களுக்கான முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் தற்போது கடும் குளிரும், பனியும் நிலவுவதால் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கொட்டும் பனியிலும், உறைய வைக்கும் குளிரிலும் குழந்தைகளுடன் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதுகுறித்து ஐ.நா அகதிகள் முகமை அதிகாரி ரோபர்டா ருஸ்ஸோ, தொடர்ந்து அகதிகள் வந்த வண்ணம் உள்ளதால் அனைவரின் தேவைகளை பூர்த்தி செய்வது கடினமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதேசமயம், பல்வேறு தரப்பிலிருந்தும் உதவிகள் வந்தாலும், கடும் பனியால் உதவிப் பொருட்களை ஹெலிகாப்டர் மூலம் கொடுக்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம்.
இருப்பினும் இவர்களுக்கு லெபனான் நாட்டு இராணுவம் பெருமளவில் உதவி புரிந்து வருகிறதாம்.
ஜீப்புகளில் உதவிப் பொருட்களை அவர்கள் தொடர்ந்து கொண்டு வந்து சேர்க்கின்றனர்.
இதேபோன்று துருக்கியில் தஞ்சமடைந்த மக்களுக்கு துருக்கி வெளிவிவகாரத்துறை அமைச்சகம் உதவிகளை செய்து வருகின்றது.

No comments:

Post Top Ad