விவசாயத்துறை க்கு ஏற்படும் பாரதூரமான விளைவுகளை கட்டுப்படுத்தும் உத்தி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, December 19, 2013

விவசாயத்துறை க்கு ஏற்படும் பாரதூரமான விளைவுகளை கட்டுப்படுத்தும் உத்தி

(tkn)

நீண்ட கால வரட்சி மற்றும் வெள்ளம் காரணமாக நாட்டின் விவசாயத்துறை க்கு ஏற்படும் பாரதூரமான விளைவு களை கட்டுப்படுத்தும் நோக்கில் "தேசிய கால நிலை மாற்றக் கொள்கை' மற்றும் 'தேசிய காலநிலை மாற்றத்திற்கு பழக் கப்படுத்திக் கொள்ளும் உத்தி போன்ற கொள்கைகளை சூழல் அமைச்சு தயாரித்துள்ளது என பிரதி அமைச்சர் ஏ.ஆர்.எம்.ஏ. காதர் தெரிவித்தார்.


சூழல் மற்றும் புதுப்பிக்கத்தக்க அமைச்சு உட்பட தெரி வுக்குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில், திண்மக்கழிவு முகாமைத்துவம், அதன் உயிரியல் பன்மைத்துவம், நீர் மற்றும் காற்று மாசடைதல் என்பன தற்போது நாட்டில் நாம் முகம் கொடுக்க வேண்டிய சவாலாக உள்ளன. இத்தகைய சவால்களை வெற்றிகரமாக முகம் கொடுப்பதற்கு சூழல் அமைச்சு அதன் முகவர்களுடன் இணைந்து திட்டங்களை தயாரித்து நிறைவேற்றி வருகிறது.

இணைந்த காலநிலை மாற்றம் உலக நாடுகளின் எதிர்கொள்ளும் பாரிய அச்சுறுத்தலாகும். இலங்கை மிகவும் குறுகிய அளவில் இத்தகைய புவி வெப்பமடைதலுக்கு பங்களிப்பு செய்தாலும் கூட அதனால் ஏற்படும் கடுமையான விளைவுகளுக்கு நாம் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. அளவுகடந்த வெள்ளம் மற்றும் வரட்சிகளின் விளைவுகளை நாம் ஏற்கனவே அனுபவித்தோம்.

பெருந்தொகையான விவசாயிகள் தங்களது வாழ்க்கைத் தொழிலை இழந்தனர். இத்தகைய நிலை ஏற்படும் ஒவ்வொரு சமயத்திலும் அரசு மானியங்களை வழங்கியோ அல்லது அவர்கள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்தோ உதவி வருகிறது.

இத்தகைய பயிர் அழிவுகளுக்கு முகம் கொடுக்கும் பொருட்டு புதிய காப்புறுதித் திட்டமொன்றை தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் தனது வரவு செலவுத்திட்ட உரையில் குறிப்பிட்டுள்ளார். இது விவசாயிகளுக்கு பெருந்துணையாயிருக்கும் என்பதில் ஐயமில்லை.

நீண்ட கால வரட்சி மற்றும் வெள்ளம் போன்றவற்றினால் நாட்டின் விவசாயத் துறைக்கு ஏற்படும் பாரதூரமான விளைவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தேசிய காலநிலை மாற்றக் கொள்கை மற்றும் தேசிய காலநிலை மாற்றத்திற்கு பழக்கப்படுத்திக் கொள்ளும் உத்தி போன்ற கொள்கைகளை சூழல் அமைச்சு தயாரித்துள்ளது.
இவை நாட்டின் உணவு பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தீய விளைவுகளுக்கு எதிர்த்து நிற்கக்கூடிய நீண்டகால இலக்கை அடைய உதவும் என்றார்.

No comments:

Post Top Ad