மட்டக்களப்பில் தொடரும் அடை மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, December 03, 2013

மட்டக்களப்பில் தொடரும் அடை மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாவது நாளாக பெய்துவரும் அடை மழை காரணமாக பல வீதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
காலை, 8.30 மணியுடன் முடிவடைந்த 72 மணிநேரத்தில் 68.4 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கே.சூரியகுமார் தெரிவித்தார்.

இவ் ஆண்டின் ஆரம்பம் முதல் இன்று வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 1750.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வருடாந்த சராசரி மழை வீழ்ச்சி 1606.6 மில்லிமீற்றர் ஆகும். ஆனால், 1750.5 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியானது வருடாந்த மொத்த மழை வீழ்ச்சியை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், தற்போது கடும் மழையுடன் காற்றும் வீசி வருவதால் கடல் கொந்தளிப்பும் காணப்படுவதுடன் கடற்றொழில் நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.
கடும் மழையினால் அன்றாட கூலித்தொழில் புரிவோர் முதல் அங்காடி வியாரிகள் வரை தமது நாளாந்த வருமானத்தை முற்றாக இழந்துள்ளனர்.
புதிய காத்தான்குடி, ஆரையம்பதி, நாவற்குடா, தாளங்குடா, மாமாங்கம், பூம்புகார் உட்பட பல இடங்களில் பாதைகளில் நீர்தேங்கியுள்ளதால் போக்குவரத்துச்சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.


No comments:

Post Top Ad