குச்சவெளி பிரதேச சபை தலைவர் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, December 17, 2013

குச்சவெளி பிரதேச சபை தலைவர் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்


(ஏ.தௌபீக் - குச்சவெளி பிரதேச சபை உதவி தவிசாளர்)

கடந்த 12-15-2013 அன்று நிவ்மூதூர் இணையத்தில் குச்சவெளி பிரதேச சபை வரவு செலவுத் திட்டம் வெற்றிகொள்ளப்படுமா ? என்ற செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அச்செய்தியில் குச்சவெளி பிரதேசசபை தலைவர் ஜனாப் ஏ.முபாறக் அவர்களுடனான நேர்காணல் குறித்த செய்தி வெளியாகியிருந்தது.


அச்செய்தியில் ஏ.முபாறக் அவர்கள் குச்சவெளி பிரதேச சபை உதவி தவிசாளர் ஆகிய என்னைப் பற்றி தவறான முறையில் அந்த நேர்காணலில் தெரிவித்திருந்தார். இச்செய்தியினைப் பார்த்து மிகவும் மனமுடைந்தேன். என்னைப்பற்றி மிகமோசமாக அடையாளம் காட்டும் வகையில் அந்த நேர்காணலில் குச்சவெளி பிரதேச சபை தலைவர் ஏ.முபாறக் அந்த நேர்காணலில் தெரிவித்திருப்பதானது எனக்கு மிகவும் கவலையளித்திருந்தது.

இதுதான் அந்தச் செய்தி

கௌரவ:தௌபீக்-
புல்மோட்டையைச் சேர்ந்த இவர் எமது சபையின் முன்னாள் தவிசாளரும் இந்நாள் பிரதித்தவிசாளருமாவார் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் போட்டியிட்டுத் தெரிவுசெய்யப்பட்டவர். வேட்பாளர் தெரிவில் இவரது பலத்த எதிர்ப்புக்களுக்கு நான் முகங்கொடுக்கவேண்டியேற்பட்டபோதிலும் இறைவனின் துணையுடன் பெருவாரியான மக்களின் பலமான ஆணையுடன் நான்  வெற்றியீட்டியும் கடமைபொறுப்பேற்கும் வைபவத்தை குழப்பும் வகையில் மிலேட்சத்தனமாகச் செயற்பட்டார். நான் பதவியேற்ற விடயத்தை சகித்துக்கொள்ள முடியாமல் சட்ட விரோதமாக நான் கடமைப் பொறுப்பேற்றதாக மெட்றோநியூஸ் பத்திரிகைக்கு பொய்யான செய்தியொன்றையும் அனுப்பியுள்ளார்.

கடந்த 2வருடத்திலும் எனது தலைமைத்துவத்தை மனதளவில் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் தொடர்ந்தும் நெருக்குவாரங்களையே ஏற்படுத்திவருகின்றார் கடந்த காலங்களில் இவர் தவிசாளராக இருந்து மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை என்னால் நிறைவேற்ற முடிந்துள்ளது. நான் தவிசாளராக பதவிவகிக்கும் தற்போதைய சந்தர்ப்பத்தில் தன்னிலை மறந்து தானும் ஒருதவிசாளராக இயங்குவதற்கு பலதடவைகள் முற்பட்டது நகைப்புக்குரியதாகும். இதுவரையிலும் சபையின் நல்லதிட்டங்கள் எதனையும் இவர் ஏற்றுக்கொண்டதில்லை. இவரது முன்மொழிவுகள் யாவும் தென்னமரவாடிப் பிரதேசத்தையே சார்ந்ததாகும்.

2014ம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தை தயாரிப்பதற்கான குழுத்தலைவராக இவரை நியமித்திருந்தபோதிலும்கூட எந்தப்பங்களிப்பும் செய்யாது செயற்பட்டார். இவர் தவிசாளராக இருந்த சபையில் பொறுப்புவாய்ந்த பதவியொன்றில் நான் இருந்தபோது என்னை 13 தடவைகளுக்கு மேல் இடமாற்றம் செய்து அதில் படுதோல்வியும் அடைந்தார் இவர் என்னிடம் புதிதாகத் தோற்கவில்லை தற்பொழுதும் பாதீட்டை தொல்வியுறச்செய்வதும்  இவரது திட்டமாகும்.வரவுசெலவுத்திட்ட நிகழ்வின்போது எவ்வாறு நடந்து கொள்ள வெண்டுமென்று எமது கட்சியின் செயலாளரினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டநிலையில் அவர் விரும்பியோ விரும்பாமலோ பாதீட்டுக்கு ஆதரவாகவே வாக்கழிக்க வேண்டிய கட்டாயத்திலுள்ளார்.

நிவ்மூதூர் இணையத்தில் வெளியான இச்செய்தி குறித்து இன்றைய தினம் குச்சவெளி பிரதேச சபை வரவுவெசலவு திட்ட கூட்டத்தில் மதிப்பிற்குரிய குச்சவெளி பிரதேச சபை தலைவர் என்னை இவ்வாறு அவமதித்திருப்பதை எல்லோர் முன்னிலையிலும் சபையில் முன்வைத்தேன். இதன் பின்னர் குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.

இவ்விடயம் சம்பந்தமாக ஊடகங்களுக்கு தான் அறிக்கை ஒன்றினை வெளியிடப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

இச்செய்தி தொடர்பான முந்தைய இணைப்பு ;- http://www.newmuthur.com/2013/12/blog-post_6828.html


No comments:

Post Top Ad