சிரியா போராளிகள் அலப்போ நகரில் பாரிய தற்கொலை தாக்குதல் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, December 22, 2013

சிரியா போராளிகள் அலப்போ நகரில் பாரிய தற்கொலை தாக்குதல்


சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிராக கடந்த 3 வருடமாக போராளிகள் சண்டையிட்டு வருகின்றனர். இதில் அலெப்போ நகரின் பெரும்பாலான பகுதிகள் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நகரை மீட்பதற்காக ஆசாத் ஹெலிகாப்டர்கள் அங்கு சமீபத்தில் 25 பேரல் குண்டுகளை வீசின. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 


இந்நிலையில், ஆசாத் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த அலெப்போ நகரின் முக்கிய மருத்துவமனையை  மீட்கும் நடவடிக்கையை போராளிகள் மேற்கொண்டனர். இதற்காக வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்ட மிகப்பெரிய டிரக் ஒன்றை மருத்துமவமனையின் முன்பு கொண்டு சென்று அவர்கள் வெடிக்க செய்தனர். 

பிரமாண்ட சப்தத்துடன் வெடித்து சிதறிய போது அங்கு மிகப்பெரிய தீப்பிளம்பு ஏற்பட்டது. இதில் நிலைகுழைந்த ஆசாத் படையினர் மீது பின்பு போராளிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அந்த மருத்துவமனயை மீண்டும் போராளிகள் தன்வசம் கொண்டுவந்தனர். இந்த சண்டையின் போது 35 போராளிகள் கொல்லப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. 

No comments:

Post Top Ad