ஐரோப்பிய யூனியனில் உக்ரைனை இணைக்க வலியுறுத்தி ஒரு லட்சம் பேர் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, December 03, 2013

ஐரோப்பிய யூனியனில் உக்ரைனை இணைக்க வலியுறுத்தி ஒரு லட்சம் பேர் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)


ஐரோப்பிய யூனியனில் உக்ரைனை இணைக்க வலியுறுத்தி அந்நாட்டில் ஒரு லட்சம் பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐரோப்பிய யூனியனில் உக்ரைன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட, அந்நாட்டின் ஜனாதிபதி விக்டர் யானுகோவிச் மறுத்து விட்டார்.

இதனைத் தொடர்ந்து உக்ரைனில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தை எதிர்க்கட்சிகள் ஊக்குவித்து வருவதுடன், நாளுக்கு நாள் புதிய போராட்டங்களையும் அறிவித்து வருகின்றனர்.
இவர்கள் ஜனாதிபதி யானுகோவிச் பதவி விலக வேண்டும் அல்லது வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கீவ் நகரின் சுதந்திரச் சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை சுமார் ஒரு லட்சம் பேர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனை தொடர்ந்து அங்கு ஆயிரக்கணக்கான பொலிசார் குவிக்கப்பட்டனர், அப்போது பொலிசார் மீது கற்களை வீசினர், போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸாரும், போராட்டக்காரர்கள் பலரும் காயமடைந்தனர்.
இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் ஒருவர், உக்ரைனில் புரட்சி வெடித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.


No comments:

Post Top Ad