அப்துல் ரவூப் ஈகைதமிழனாம் வேடிக்கையை பார்த்தீர்களா ? - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, December 15, 2013

அப்துல் ரவூப் ஈகைதமிழனாம் வேடிக்கையை பார்த்தீர்களா ?


(மண்ணின் மைந்தன்)

இன்று தமிழ் ஊடகங்கள் எங்கும் தற்கொலை செய்து மரணம் அடைந்த அப்துல் ரவூப் பற்றிய பேச்சுத்தான். இந்த ஊடகங்கள் சொல்வது போல அப்துல் ரவூப் இலங்கை முஸ்லிம்களுக்காக வீரமரணம் அடையவில்லை. புலிகளால் வடக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக தற்கொலைசெய்யவில்லை. பாஷிச புலிகளால் இலங்கையின் மூலை முடுக்கெல்லாம் கொன்று குவிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக தீ குளிக்கவில்லை.


புலிகளால் அடக்கி ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக இவர் தனது உயிரை விடவில்லை. மாறாக இவர் உயிர்நீத்திருப்பதோ இலங்கை தமிழர்களுக்காக. இலங்கை தமிழர்கள் என்றால் யார் ? புலிகளும்,புலிகளுக்கு ஆதரவானவர்கள் மட்டும்தானா ? இலங்கை தமிழ்பேசும் முஸ்லிம்களை புலிகள் தமிழர்களாக என்றைக்கும் கருதியதே கிடையாது.

ஆக இவர் தற்கொலை செய்திருப்பதானது இலங்கை தமிழர்களுக்காக மாத்திரம்தான். ஆனால் இலங்கை முஸ்லிம்களுக்காக இல்லை. அதிலும் குறிப்பாக இவர் முஸ்லிம் பெயரினை வைத்துக்கொண்டு தற்கொலை செய்ததினால் இவரை முஸ்லிம்களும் இஸ்லாமும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

ஏனெனில் இஸ்லாத்தில் தற்கொலைக்கு இடமே கிடையாது என்பதாகும்

No comments:

Post Top Ad