முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து கல்முனை மாநகர சபையில் அமளிதுமளி (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, December 23, 2013

முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து கல்முனை மாநகர சபையில் அமளிதுமளி (படங்கள் இணைப்பு)


கல்முனை மாநகர சபையின் 2014ஆம் வருடத்துக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவு நடைபெறாது என முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து அங்கு பெரும் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.
இன்று மாலை 2.30மணிக்கு வரவு செலவுத் திட்ட முன்மொழிவு நடைபெறவிருந்தபோது அனைத்து உறுப்பினர்களும் அங்கு வருகை தந்திருந்தனர்.
இந்நிலையில், மாநகர முதல்வர் இன்று இந்த வரவு செலவுத்திட்டம் இடம்பெறாது என அறிவித்துள்ளார். இதன்பின்னர் அங்கு கூடியிருந்தவர்கள் தங்களது கைகளில் இருந்த காகிதங்களை விசிறி எறிந்தபோது பெரும் அமளிதுமளி ஏற்பட்டது.
இதன்பின்னர் பொலிசார் அவ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டு நலைமைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
இச்சம்பவத்தால் மாநகர முதல்வரை பொலிஸ் பாதுகாப்புடனே அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர்.
No comments:

Post Top Ad