வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை கொழும்பில் ஆர்ப்பாட்டம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, December 01, 2013

வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை கொழும்பில் ஆர்ப்பாட்டம்


வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அகில இலங்கை கமநல சம்மேளனம் தெரிவித்துள்ளது.
வரவு-செலவுத் திட்டத்திற்கு முன் நிதி அமைச்சு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமை மற்றும் வரவு -  செலவுத் திட்டத்தில் விவசாயிகள் மறக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.
நாளை மாலை 4 மணியளவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.
விவசாயிகள் தமது தொழில் சம்பிரதாய ஆடையில் இவ் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post Top Ad