த.தே.கூட்டமைப்பின் கீழிருக்கின்ற காரைதீவு பிரதேச சபை வரவு செலவு திட்டம் தேல்வி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, December 18, 2013

த.தே.கூட்டமைப்பின் கீழிருக்கின்ற காரைதீவு பிரதேச சபை வரவு செலவு திட்டம் தேல்வி

(tm)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தின் கீழிருக்கின்ற  காரைதீவு பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்டம் 3 மேலதிக வாக்குகளால் இன்று புதன்கிழமை  தோற்கடிக்கப்பட்டுள்ளது.


காரைதீவு பிரதேச சபையின் இவ்வாண்டுக்கான இறுதியமர்வு தவிசாளர் தலைமையில் இன்று புதன்கிழமை கூடியது. இதன்போது தவிசாளரினால் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து வரவு-செலவுத்திட்டம் தொடர்பாக விவாதம் இடம்பெற்றது.

இவ்விவாதத்தின் போது கடந்து மூன்று ஆண்டு காலமாக காரைதீவு பிரதேச சபையினால் நெல்சிப் மற்றும் புறநெகும நிதி ஒதுக்கீட்டின் மூலம் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளில் மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி ஆகிய முஸ்லிம் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் தனதுரையில் குற்றஞ்சாட்டினார்.

இதேவேளை, தவிசாளரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இவ்வரவு-செலவுத்திட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களின் ஆலோசனைகளை பெறாமல் தயாரிக்கப்பட்டதாகவும், மக்கள் பணிக்காக இவ்வரவு-செலவுத்திட்டத்தில் நிதி
ஒதுக்கீடு செய்யப்படாமல் பிரதேச சபையை நிர்வகிப்பதற்கே கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.

அத்தோடு சபையின் அனுமதியினை பெறாமல் காரைதீவு நூலகத்திற்கு தவிசாளர் தன்னிச்சையாக முடிவெடுத்து புத்தகங்களை கொள்வனவு செய்துள்ளார் எனவும் குற்றச்சாட்டுக்களை சுமத்தினர்.

இதனையடுத்து இவ்வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மூவரும், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரும் இணைந்து திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர். 

வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 1 வாக்கும்,எதிராக 4 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இச்சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 4 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒருவருமாக மொத்தம் 5 உறுப்பினர்களே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad