இரகசிய வரவுசெலவு திட்ட வாக்கெடுப்பு நடத்தினால் அரசாங்கம் தோல்வியடையும் ! - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, December 18, 2013

இரகசிய வரவுசெலவு திட்ட வாக்கெடுப்பு நடத்தினால் அரசாங்கம் தோல்வியடையும் !


வரவு செலவுத் திட்டம் தொடர்பில் இரகசியமான வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அரசாங்கம் கட்டாயம் தோல்வியடையும் என மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தில் இருப்பவர்கள் கூட ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை வெற்றிபெறச் செய்ய முயற்சிக்க மாட்டார்கள்.
கசினோ சூதாட்டம் வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். சட்டம் தரம் கெட்டுப் போய்விட்டது.
மகிந்தவின் இந்த அரசாங்கம் வெட்கமில்லாத அரசாங்கம். அரசாங்கத்தில் இருப்பவர்கள் பிரதமர் டி.எம். ஜயரத்ன பதவியில் இருந்து விலக வேண்டும் எனக் கூறி வருகின்றனர்.
நாட்டுக்குள் எதனோல் வருகிறது. அமைச்சர்கள் அதனை விநியோகிக்கின்றனர்.
நாட்டின் பௌத்த பிக்குமார் உடைந்து பிளவுபட்டுச் சென்றுள்ளனர். சில பௌத்த பிக்குகள் பிரதமரை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

No comments:

Post Top Ad