மூதூர் வேதத்தீவு மீள் குடியேற்ற கிராமத்தின் அபிவிருத்தி திட்டங்கள் மக்களிடம் கையளிப்பு (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, December 29, 2013

மூதூர் வேதத்தீவு மீள் குடியேற்ற கிராமத்தின் அபிவிருத்தி திட்டங்கள் மக்களிடம் கையளிப்பு (படங்கள் இணைப்பு)


(மூதூர் முறாசில்)

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீடு மற்றும் கிழக்கு மாகாண சம்மான பிராந்திய அபிவிருத்தி திட்டத்தின் நிதி ஒதுக்கீடு ஆகியவற்றின் மூலம் மூதூர் வேதத்தீவு மீள் குடியேற்ற கிராமத்தில் 40 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் இன்று ஞாயிற்றுக் கிழமை மக்களிடம் கையளிக்கப்பட்டன.


இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ்,இணைப்புச் செயலாளர் டாக்டர் எம். சியா மூதூர் பிரதேச செயலாளர்  என் பிரதீபன் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.
இதன்போது அமைச்சினால் அமைக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது. அத்தோடு  வேதத்தீவுக்கான பேரூந்து  சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் பாலர் பாடசாலையொன்றும் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

ஷாபி நகர்- வேதத்தீவு ஆற்றைக் கடப்பதற்கு இயந்திரப் படகுப்பாதை சேவை ஒன்றும்  ஆரம்பித்து  வைக்கப்பட்டது.1 comment:

Muthur Pradeshiya Sabha (மூதூர் பிரதேச சபை) said...

Kadantha kala arasiyal “THANTHIRA NADAHANGAL" tholaikkatchi,vanoley warththaikalalum sila paththirikaikalalum kettum,parththum maraithana! 2008 mahana sabha election kalangalil mutur kadal thadai amaippatha sila munneduppukkal seiyappattu kaividappattana kiviliya veethi,mutur neerwalangum kulaikal, poontrawatrudan veththadeewom,arafa nagar,ralguly poontrana 2014 waravirukkum election naadahamahamal munnurimai aliththu thoritha wehaththudan mudippikkapaduma enum kelvi kannudaneye emathu Mutur makkal .

Post Top Ad