அப்துல் காதர் முல்லாவை தூக்கிலிட்ட சம்பவம் நீதிமன்றத்தை பயன்படுத்தி நடத்திய அரசியல் படுகொலை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, December 15, 2013

அப்துல் காதர் முல்லாவை தூக்கிலிட்ட சம்பவம் நீதிமன்றத்தை பயன்படுத்தி நடத்திய அரசியல் படுகொலை


வங்காள தேசத்தில் ஜமாஅத்தே இஸ்லாமியின் முக்கிய தலைவர் அப்துல் காதர் முல்லாவை தூக்கிலிட்ட ஷேக் ஹஸீனா அரசின் நடவடிக்கையை பாப்புலர் ஃப்ரண்ட்டின் டெல்லி மாநில பிரிவு கண்டனம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக டெல்லி மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர் அன்ஸாருல் ஹக் வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில் கூறியிருப்பது: ஷேக் ஹஸீனா அரசு தனது பதவி நாற்காலியை காப்பாற்ற நீதிமன்றத்தை பயன்படுத்தி நடத்திய அரசியல் படுகொலைதான் அப்துல் காதர் முல்லாவை தூக்கிலிட்ட சம்பவம்.

வங்காள தேசத்தில் மக்களிடையே மோதலை உருவாக்கி இரத்தத்தை ஓடச் செய்வதற்கு அரசு முயற்சிக்கிறது. வங்காள தேச அரசின் மனித குலத்திற்கு எதிரான செயலுக்கு எதிராக இந்தியா கண்ணை மூடக் கூடாது. இப்படுகொலையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல இந்தியா முயற்சி எடுக்க வேண்டும்.
இவ்வாறு அன்ஸாருல் ஹக் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post Top Ad