புல்மோட்டை சிறுகடல் தொழிலாளிகளின் பிரச்சினைக்கு தீர்வு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, December 19, 2013

புல்மோட்டை சிறுகடல் தொழிலாளிகளின் பிரச்சினைக்கு தீர்வு


(ஏ.சீ.ஹாலீத்-குச்சவெளி விசேட நிருபர்)

புல்மோட்டை சிறுகடல் தொழிலாளிகளின் பிரச்சினைக்கு குச்சவெளிப் பிரதேச சபைத் தலைவர் ஏ.முபாறக் தீர்வினைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.
புல்மோட்டைப் பிரதேசத்தின் ஜீவனோபாயத் தொழிலான கொக்கிளாய் கடநீரேரியில் இறால்பிடித் தொழிலின் மூலம் அன்றாடம் பிழைப்பு நடாத்திவரும் மக்களின் தொழில் விடயத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினை உரியவர்களின் கவனத்திற்குக் கொண்டுவந்து குச்சவெளிப்பிரதேச சபைத் தலைவர் ஏ.முபாறக் அவர்கள் சுமூகமான தீர்வினைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.


அடுத்தவருட ஆரம்பத்திலிருந்து பல்வேறுபட்ட நியதிகளுக்கும்ää விதிமுறைகளுக்கும் உட்பட்டே மேற்படித் தொழிலில் ஈடுபட முடியும் என்ற அதிகாரிகளின் அறிவுறுத்தல்களினால் தொழிலாளிகள் பலத்த சிரமங்களையும்ää மனவுளைச்சல்களையும் எதிர்கொண்டிருந்தனர். இத்தொழில் விடயமாக அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு குச்சவெளிப்பிரதேச சபைத்தவிசாளர் பலதடவைகளில் கழத்திற்குச் சென்று தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்துவரும் நிலையில் அண்மையில் ஹிரு என்றழைக்கப்படும் தொலைக்காட்யில் பிரதேசத்தின் தலைவர் ஏ.முபாறக் அவர்களையும்ää தொழிலாழிகளையும் சட்டவிரோத கும்பல் எனச்சித்தரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2013-12-18 மாலை 6 மணியளவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாழிகையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின்போது பிரதேசத்தின் தலைவர் ஏ.முபாறக் அவர்களினால் இப்பிரச்சினைக்கு நிரந்திர தீர்வினைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் கடற்றொழில் மற்றும் நீரியல் வழத்துறை அமைச்சர் றாஜித சேனாரத்னää பிரதி அமைச்சர் சரத்குமார குனரத்னää மக்கள் தொடர்பாடல் மனிதவளத்துறை அமைச்சர் மேவின்சில்வா போன்றோருடன் பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே அவர்களின் பங்குபற்றுதலுடன் தாம் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சி என்ற உறவின் உரிமையோடு மக்களின் ஜீவனோபாயத்திற்காக மனஉருக்கத்தோடு வாதாட்டத்தில் ஈடுபட்டதன் பயனாக இனபேதங்களுக்கப்பால் சகலரும் மேற்குறித்த தொழிலில் எந்தத் தடைகளுமின்றி சுமூகமான முறையில் ஈடுபடுவதற்கான அனுமதி கிடைத்துள்ளது.

மேலும் ஒற்றுமையுடனும்ää சகோதரத்துவத்துடனும்ää இத்தொழிலில் ஈடுபடும் சகலரும் நடந்துகொள்ள வேண்டும் என்றும் உணவழிப்பவன் இறைவன் என்ற விடயத்தை அனைவரும் மறந்துவிடாது செயற்படுமாறும் பிரதேசத்தின் தலைவர் ஏ.முபாறக் அவர்கள் தொழிலாளிகழைக் கேட்டுக்கொண்டார்.No comments:

Post Top Ad