நாளை பாபரி மஸ்ஜித் தினம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, December 05, 2013

நாளை பாபரி மஸ்ஜித் தினம்


உலக நாடுகளின் முன்னால் இந்தியாவை தலைக்குனிய வைத்து,போலீசும், ராணுவமும், அரசும், நீதி பீடமும் பார்வையாளர்களாக மாறஹிந்துத்துவா பாசிச சக்திகள் இந்தியாவின் வரலாற்றுச்சின்னமும், முஸ்லிம்களின் வழிப்பாட்டுத்தலமுமான பாபரி மஸ்ஜிதை தகர்த்து நாளை 21ஆண்டுகள் நிறைவுறுகிறது.


1992- டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி பாபரி மஸ்ஜிதின் கும்பாக்களுடன்நாட்டின் கண்ணியம் வீழ்ந்தது.அன்று ஒரு கறுப்பு ஞாயிறாக வரலாற்றில்பதிவானது.தேசத்தந்தை காந்தியின் படுகொலைக்குப் பிறகு இந்தியா கண்டமிகப்பெரிய தீவிரவாத செயலுக்கு உலகம் சாட்சியானது.உச்சநீதிமன்றத்திற்கு கூட சவால் விடுத்து நடத்தப்பட்ட பயங்கரவாதசெயலுக்கு காரணமானவர்கள் இன்றும் சுதந்திரமாக சுகம்அனுபவிக்கின்றார்கள்.

எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, பால் தாக்கரே,அசோக் சிங்கால், உமா பாரதி, கிரிராஜ் கிஷோர், ஸாத்வி ரிதாம்பராஉள்ளிட்டோர் பாபரி மஸ்ஜிதை இடிக்க சதித்திட்டம் தீட்டினார்கள் என்றுலிபர்ஹான் கமிஷன் கண்டுபிடித்த பிறகும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கைஎடுக்க ஒரு சிறுவிரலைக்கூட அசைக்க நமது சட்டங்களால் இயலவில்லை.

மஸ்ஜிதை தகர்ப்பதில் நேரடியாக பங்கேற்ற சங்க்பரிவார தலைவர்களுடன்,கரசேவகர்கள் என்ற காவி பயங்கரவாதிகள் இறையில்லமான பாபரி மஸ்ஜிதை இடிக்கும்போது வெறும் 11 கிலோமீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்ட ராணுவத்தைசம்பவம் அங்கு செல்ல அனுமதிக்காமல் பாபரி மஸ்ஜித் முழுவதும்இடிக்கப்படும் வரை பூஜை அறையில் கதவை சாத்திவிட்டு உள்ளே இருந்த முன்னாள்பிரதமர் நரசிம்மராவ், 1989-ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் நிலத்தில் ராமனுக்குகோயில் கட்ட அடிக்கல் நாட்ட அனுமதி அளித்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி உள்ளிட்ட மதசார்பற்ற(?) தலைவர்களும் இந்த பயங்கரவாத குற்றத்தில்சம பங்காளிகளே.

நரசிம்மராவால் நியமிக்கப்பட்ட லிபர்ஹான் கமிஷன் 16ஆண்டுகளுக்கு பிறகு பல கோடி ரூபாய்களை செலவழித்து அளித்த அறிக்கையில் சங்க்பரிவார தலைவர்கள் சதித்திட்டம் தீட்டி பாபரி மஸ்ஜிதை இடித்துதள்ளியதாக தெளிவாக தெரிவித்திருந்தார்.ஆனால், பாபரி மஸ்ஜித் இடிப்புவழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ முதலில் அத்வானி மற்றும் அவரது கூட்டாளிகள்மீது சதித்திட்டம் தீட்டிய குற்றம் சுமத்தாதது சந்தேகத்தைஏற்படுத்துகிறது.
பின்னர் சதித்திட்டம் குற்றம் சுமத்தியபோது அலகாபாத்உயர்நீதிமன்றம் சி.பி.ஐயின் நடவடிக்கையை ரத்துச் செய்துஉத்தரவிட்டது.இதற்கு எதிராக சி.பி.ஐ சமர்ப்பித்த மேல் முறையீடு தற்போதுஉச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது.

பாபரி மஸ்ஜித் நிலத்தின் உரிமைக்குறித்த வழக்கும் தற்போதுஉச்சநீதிமன்றத்தில் உள்ளது.பாபரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த 2.77 ஏக்கர்நிலத்தை ஹிந்து,முஸ்லிம், நிர்மோஹி அகாரா ஆகிய 3 தரப்பினருக்கும்பாகப்பிரிவினைச் செய்து 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி அலகாபாத்உயர்நீதிமன்றம் ஓர் அதிசய தீர்ப்பை அளித்தது. எவ்வித ஆதாரமும், ஆவணங்களும்இன்றி கற்பனையான புராண கதைகளை ஆதாரமாக கொண்டு இத்தீர்ப்புவழங்கப்பட்டது.இத்தீர்ப்பை 2011-ஆம் ஆண்டு மே மாதம் 9-ஆம் தேதிஉச்சநீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்தது.
1993-ஆம் ஆண்டு ஜனவரி மாதம்அரசு கையகப்படுத்திய 67.03 ஏக்கர் நிலமும், 1994-ஆம் ஆண்டிலும், 2002-மார்ச் மாதத்திலும் உச்சநீதிமன்றம் வெளியிட்ட ஸ்டேட்டஸ்கோ(பழைய நிலைதொடர) நீடிக்கச்செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.பாபரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த நிலத்தில் தற்போதும் பூஜைகள் தங்குதடையின்றி நடந்து வருகின்றன.நூற்றாண்டுகளாக முஸ்லிம்கள் ஓரிறைவனை வணங்கிவந்த மஸ்ஜிதில் அவர்களுக்கு வழிப்பாட்டு  உரிமை மறுக்கப்பட்டு,ஹிந்துக்களுக்கு பூஜை செய்ய அனுமதி வழங்கிய ஃபைசாபாத் நீதிமன்றத்தின்அநீதியான தீர்ப்பின் சாதகம் இன்றும் தொடருகிறது. 14 கம்பெனி ஆயுத போலீஸ்பாதுகாப்பு வழங்கி கோடிக்கணக்கான ரூபாயை ஆண்டு தோறும் செலவிட்டு தற்காலிகசட்டவிரோத கோயிலை அரசு பராமரித்து வருகிறது.பாபரி மஸ்ஜிதை மறக்கடிக்கச் செய்ய அதனை இடித்தவர்களால் இன்று வரைஇயலவில்லை.பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் ஒரு நாள் நீதி வெற்றிப் பெறும்என்ற நம்பிக்கையில் முஸ்லிம்கள் உள்ளனர்.

No comments:

Post Top Ad