சூடானுக்கு செல்ல வேண்டாம்! இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரிக்கை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, December 22, 2013

சூடானுக்கு செல்ல வேண்டாம்! இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரிக்கை

(ad)

சூடான் நாட்டிற்கு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வதில் அவதானமாக இருக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


சூடானில் இன மோதல்கள் தீவிரமடைந்துள்ளது. 

இதன் காரணமாக சூடானில் வேலை வாய்ப்பு பெற்றுச் செல்லும் இலங்கையர்கள் தமது பாதுகாப்பு தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது. 

தெற்கு சூடானில் இலங்கை பணியாளர்கள் 75 பேர் வரையில் பணியாற்றுகின்ற நிலையில் அவசியம் ஏற்படில் அவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 

முன்னாள் துணை ஜனாதிபதி ரீக் மஷார் தன்னை பதவியிலிருந்து கவிழ்க்க சதித்திட்டம் தீட்டுவதாக ஜனாதிபதி சல்வா கீயர் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அங்கு கடந்த ஞாயிறு முதல் நடந்துவரும் இன வன்முறைகளில் 500க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

No comments:

Post Top Ad