சிறுவர் துஷ்பிரயோகம் குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசேட நீதிமன்றம் விரைவில் ! ரவூப் ஹக்கீம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, December 17, 2013

சிறுவர் துஷ்பிரயோகம் குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசேட நீதிமன்றம் விரைவில் ! ரவூப் ஹக்கீம்


சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வல்லுறவு சம்பந்தமாக குற்றச்சாட்டுக்களை விசாரிக்க விசேட நீதிமன்றம் ஒன்று விரைவில் ஏற்படுத்தப்படும் என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்
இந்த வழக்குகளுக்காக நீதவான் நீதிமன்றம் மட்டுமல்லாது, மேல் நீதிமன்றங்களையும் ஏற்படுத்தி சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வல்லுறவு தொடர்பான வழக்குகளை துரிதமாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சொன்னார்.
துஷ்பிரயோகம்
நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஷி சேனாநாயக்கவின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
கடந்த 4 வருடங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் பாலியல் வல்லுறவு தொடர்பில் 2 ஆயிரத்து 420 குற்றவாளிகளில் 517 பேருக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக ரோஷி சேனாநாயக்க குறிப்பிட்டார்.

No comments:

Post Top Ad