ஓடிக்கொண்டிருந்த ரயிலில் பாய்ந்து ஏறிய ஏறாவூர் முஸ்லிம் இளைஞர் கீழே விழுந்து வபாத் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, December 03, 2013

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் பாய்ந்து ஏறிய ஏறாவூர் முஸ்லிம் இளைஞர் கீழே விழுந்து வபாத்


ஓடிக்கொண்டிருந்த ரயிலில் பாய்ந்து ஏறிய இளைஞர் ஒருவர் தவறி கீழே விழுந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.
ஏறாவூர், ஐயன்கேணியைச் சேர்ந்த கலந்தர் தாவூத் அஸீஸ் (வயது 17) என்ற இளைஞரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.

நேற்று திங்கட்கிழமை இரவு 7.15 மணிக்கு கொழும்பிலிருந்து மட்டக்களப்பை நோக்கிப் புறப்பட்ட ரயிலில் இந்த இளைஞரும் பயணித்துள்ளார்.
மேற்படி ரயில் பொல்காவெலயில் தரித்து நின்ற போது, இவர் ரயிலை விட்டிறங்கி இரவு உணவு வாங்குவதற்காக சிற்றுண்டிச்சாலைக்குச் சென்று உணவு வாங்கிக்கொண்டு திரும்பிய போது
ரயில் நகரத் தொடங்கியுள்ளது.
இவ்வாறு நகரத் தொடங்கிய ரயிலில் இவர் பாய்ந்து ஏறிய போது கால் தடுக்கி கீழே விழுந்து ரயில் சில்லில் அகப்பட்டுள்ளார்.
இவரது ஒரு கையும் ஒரு காலும் முறிந்த நிலையில் உடனடியாக வத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இவர் அங்கு மரணமடைந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post Top Ad