சகல முன்பள்ளி அதிபர்,ஆசிரியர்களுக்கான கூட்டம்-காத்தான்குடியில்-(படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, December 16, 2013

சகல முன்பள்ளி அதிபர்,ஆசிரியர்களுக்கான கூட்டம்-காத்தான்குடியில்-(படங்கள் இணைப்பு)


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எம்.நிஸாமினால் கடந்த 2013-12-11- திகதியன்று திருகோணாமலையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்பள்ளிகளுக்கான கல்வி அபிவிருத்தித் திட்டமிடல்ääஒழுங்கமைப்பு ஆகியவற்றை மேற்கொள்ளும் பொருட்டு மட்டக்;களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள சகல முன்பள்ளி அதிபர்ääஆசிரியர்களுக்கான கூட்டம் 16-12-2013 இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு-காத்தான்குடி அன்வர் வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.


இதன் போது வலயக் கல்விப் பணிப்பாளர்களினால் முன்பள்ளி அதிபர்ääஆசிரியர்களுக்கு கருத்துரைகள் வழங்கி வைக்கப்ட்டது.

இக் கூட்டத்தில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய திட்டமிடல் பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.அமீர்ää மட்டு-மத்தி கல்வி வலய விஷேட கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் சரீப் ääமட்டக்களப்பு மத்தி வலய கல்வி பணிமனையின் முன்பள்ளிக்கு பொறுப்பான உதவிக்கல்வி பணிப்பாளர் ஜெமிலுன் நிஸாääகாத்தான்குடிப் பிரதேச கோட்டக்கல்விப் பணிபாளர் எஸ்.எம்.எம்.சுபைர்ää காத்தான்குடி பிரதேசத்திலுள்ள சகல முன்பள்ளி அதிபர்ääஆசிரியர்கள்ääபாலர்களின் தோழன் லக்கி ääஉட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு இடம்பெற்ற கூட்டத்திற்கு அழைக்கப்பட்டவர்களுக்கு  முன்பள்ளி அமைந்துள்ள காணி பற்றிய விபரம் நிலத்தின் உரிமை ääநிலத்தின் பரப்பு ääமுன்பள்ளியில் உள்ள தளபாடங்கள் பற்றிய விபரம்ääமாணவர் விபரம்ääகற்பிக்கும் ஆசிரியர்களின் விபரங்கள் போன்ற ஆவணங்களுடன் சமூகமளிக்குமாறு மட்டக்;களளப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்தினால் வேண்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:

Post Top Ad