ஒரு குழந்தைக்கு தாயான பின்னரும் க.பொ.த. (உ/த) பரீட்சை எழுதி தேசியமட்டத்தில் நான்காம் இடத்தைப் பெற்று சாதனை படைத்த பெண் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, December 26, 2013

ஒரு குழந்தைக்கு தாயான பின்னரும் க.பொ.த. (உ/த) பரீட்சை எழுதி தேசியமட்டத்தில் நான்காம் இடத்தைப் பெற்று சாதனை படைத்த பெண்


(a.m.jafarullah)

அண்மையில் வெளியான க.பொ .த (உ/த ) பரீட்சைப் பெறு பேறுகளின் அடிப்படையில் கிண்ணியா கல்வி வலயத்தில் முள்ளிப் பொத்தானை கோட்டத்திட்குட்பட்ட பாடசாலையான தி/அல் ஹிஜ்ரா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான முள்ளிப் பொத்தனையைச் சேர்ந்த  ஜபாருல்லாஹ் பஷ்மினா வெளி வாரியாகத் தோற்றி  மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் நான்காம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.


இவர் தனது ஆரம்பக் கல்வியை தி/பாத்திமா பாலிகா மற்றும் குளியாப்பிட்டி அரக்கியாள முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கற்று உயர் தரத்தை மேற்படி தி/அல் ஹிஜ்ரா மகா வித்தியாலயத்திலும் கற்றார்.

ஒரு குழந்தைக்குத் தாயான இவர் திருமணம் என்பது கல்வி முன்னேற்றத்துக்கு எந்தவகையிலும் தடை  இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தனது  கணவர் ரிஜாசுர் ஜான் அவர்களின் பூரண ஒத்துழைப்புடனும் பெற்றோரின் ஊக்குவிப்புடனும் இச்சாதனையை நிலை நாட்டியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

No comments:

Post Top Ad