புல்மோட்டையில் பறிபோகும் முஸ்லிம்களது காணிகள் ? ஒன்றிணைவார்களா ? - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, December 25, 2013

புல்மோட்டையில் பறிபோகும் முஸ்லிம்களது காணிகள் ? ஒன்றிணைவார்களா ?


(மூதூர் முறாசில்)

நீண்ட காலமாக நிலவிவந்த  யுத்தம் முடிவுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து புதிய பல பிரச்சினைகளும் ஆங்காங்கு எழுச்சி பெற்று வருகின்றது. இந்தகைய பிரச்சினைகளில்   முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்கள் அல்லது நெருக்குவாரங்களும் ஒன்றாகும்.
எல்லோரும் கூறுவதுபோல முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகள் தீய சக்திகளினாலேயே மேற்கொள்ளப்படுகின்றது. அத்தகைய தீய சக்திகளின் செயற்பாடுகள்  சிலவேளைகளில்   நேரடியாகவும் பலவேளைகளில் மறைமுகமாகவும் இடம்பெறுகின்றது. அத்தகைய செயற்பாடுகள் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டு  குறுகிய  நீண்ட கால திட்டங்களைக் கொண்டதாக செயற்படுத்தப்படுகின்றது.


அத்தீய சக்திகள்  மறைமுகமாக செயற்படுவதானது நேரடியாகச் செயற்படுவதிலும் அபாயகரமானதாகும். மறைமுகமாச் செயற்படும் குறித்த செயலின் போது எவர் எவரோ எமக்கு தோற்றம் கொடுக்கின்றார்கள். அத்தகையவர்களை நாம் எமக்கெதிராகனவர்களாக முழுமையாக அடையாளப்படுத்துவது பொருத்தமான செயற்பாடாக அமையாது. ‘கிறீஸ்மேன்’  விடயமும் ‘மர்ம மனிதன்’ விடயமும் அதையொத்த ஏராளமான விடயங்களும் நமக்கு கற்றுத்தந்தது அதைத்தானே! எய்தவன் இருக்க அம்பை நோகலாமா என்ன?!

இனவாதிகளின் தந்திர புத்தியும் காணிப் பறிப்பும்:

இந்தவகையில்தான் நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெறுவதுபோல  திருகோணமலை மாவட்டத்திலும்  சில இடங்களில்  முஸ்லிம்களது காணிகள் அபகரிக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது. இவ்வாறு முஸ்லிம்களது காணிகள் பறிபோகும்  இடங்களில் ஒன்றே   புல்மோட்டையாகும்.

புல்மோட்டைப் பகுதியில் நீண்ட காலமாக முஸ்லிம்கள் குடியிருந்துவந்த  அல்லது விவசாயம் செய்து வந்த   காணிகளே தற்போது பறிக்கப்பட்டு வருகின்றது. 1970ஆம் ஆண்டு முதல் முஸ்லிம்கள்  குடியிருந்து வரும் மண்கிண்டிääபட்டிக்குடா முதலான பகுதிகளிலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அத்தோடுääபுல்மோட்டையில்  13ஆம் 14ஆம்  கட்டை உள்ளிட்ட வேறு சில பகுதிகளிலும் இதே நிலைமேயே  தொடர்கிறது.
நீண்ட காலமாக முஸ்லிம்களின் ஆளுகைக்குள்  இருக்கும் இக்காணிகளில் தனியார் உறுதிகளை உடையவைகளும்  அரசாங்க அனுமதிப் பத்திரத்தை பெற்றவைகளும் உள்ள நிலையிலேயே இக்காணிப் பறிப்பு இடம்பெறுகின்றது.

இதேவேளைää சுமார் 40 வருடங்களாக முஸ்லிம் மக்கள்  இப்பகுதிகளில் வாழ்ந்துவந்தபோதும் தமது ஜீவனோபாயமான விவசாயத்தைக் கைக்கொண்ட போதும் தனியார் உறுதிகளையோ காணி அனுமதிப் பத்திரங்களையோ பெற்றிருக்காதவர்களும் இவர்களில் உள்ளனர். இருந்தபோதும் இத்தகையவர்களுக்கு காணி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொடுப்பதில் முஸ்லிம் அரசியல்வாதிகள் எடுத்த முயற்சிகள் பெரிதும் வெற்றி பெறவில்லை.

இனவாதிகள் தத்தம் இனத்திற்கு அவற்றைப் பறித்துக்கொடுக்க வேண்டும் என்ற தந்திர புத்தியினால் திட்டமிட்டு அங்கு குடியிருந்த ஏனைய மக்களுக்கு காணி அனுமதிப் பத்திரத்தை வழங்காது காலத்தைக் கடத்தியுள்ளனர்.
புல்மோட்டை பிரதேசமானது விவசாயத்திற்கும் மீன்பிடித் தொழிலுக்கும் ஏனைய பௌதிக  வளங்களுக்கும் பிரசித்தமான  பகுதியாக இருப்பதினால் தத்தம் இனத்தினருக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற அவா பொறுப்பு வாய்ந்த அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தந்திர புத்தியை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம்களுக்கு காணி அனுமதிப் பத்திரத்தை வழங்காது காலம் கடத்திய இரு இனங்களையும் சார்ந்த இனவாதிகளில் முதல்வகையிலான இனவாதிகள் தமது இனத்திற்குப் பெற்றுக் கொடுக்கவேண்டும் என்று நீண்ட காலமாக திட்டமிட்டு வந்த போதும் அத்திட்டத்தை செயற்படுத்த முடியாத நிலையில் இரண்டாவது வலுவான இனவாதிகளின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைத்து வருகின்றனர். இவ்விரண்டு வகை இனவாதிகளும் குறித்த காணிகளிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றுவதில் ஒருமித்து செயற்படுகின்றனர்.

தோல்வி கண்ட காணிச் சொந்தக்காரர்கள்:

குறித்த காணிகளில் சட்டபூர்வமான ஆவணங்களை உடைய காணிச் சொந்தக் காரர்கள்   தமக்கெதிராக மேற் கொள்ளப்பட்ட சட்ட நடிவடிக்கையின் போது அக்காணிகளில் குடியிருந்ததனை  உறுப்படுத்துவதில்   தோல்வியையே கண்டுள்ளனர்.

நீண்ட காலமாக  குடியிருந்தனை சான்றுப்படுத்தத்  தக்கவாறு தனியார் காணி உறுதிகள் அல்லது காணி அனுமதிப்பத்திரங்கள் அல்லது அவற்றுக்கு இணையான ஆவணங்களைக் கோப்பிடாததும் குறித்த காணிகளிலிருந்து ஏன் வெளியேற்றப்படக் கூடாது என்பதற்கான காரணங்களைக் முறையாகக் காட்டாததும் அவர்கள் அத்தோல்வியை அடைவதற்கு  காரணமாக அமைந்திருக்கலாம்.

எனவேää அக்காணி சம்பந்தமாக ஈடுபாடு செலுத்தும் அப்பிரதேச அரசியல்வாதிகளோ அல்லது பொதுநல விரும்பிகளோ இவ்விடயத்தில் அனுபவமுள்ள சட்டவியலாளர்களின் உதவியைப் பெற்றுக் கொள்வதில் காணிச் சொந்தக் காரர்களுக்கு  உரிய வழிகாட்டலை மேற்கொண்டிருத்தல்  வேண்டும்.

பிரதேச அரசியல் வாதிகள் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு ஈமானிய உணர்வுடன்  ஒன்றிணைந்து செயற்படுவதற்கு முன்வருதல்; அவசியமாகும். இவ்விடயத்தில் உலமாக்களது வகிபாகமும் முக்கியமானதாகும்.

சொந்த காணியிலிருந்து  வெளியேறக் காலக்கெடு:

நீண்டகாலமாக குறித்த காணிகளில் விவசாயம் வெய்து வாழ்ந்து வரும் மக்களை  எதிர்வரும்  25ஆம் திகதிக்கு முன்பு அங்கிருந்து வெளியேறுமாறு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் இக்காலக்கெடுவிற்கு முன்பே அக்காணிகளிலிருந்த குடில்களும்  ஏனையனவும் பெரும்பாலும் அழிக்கப்பட்டு விட்டன.

காணிப் பறிப்பின் இறுதி நோக்கம்:  

முஸ்லிம்களது  காணிகளை கையகப்படுத்துவதற்கு     பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் அக்காணிகளில் பெரும்பான்மை  இனத்தினரை குடியமர்த்துவதே இறுதி நோக்கம் என்பதை எவரும் இலகுவில் புரிந்து கொள்வர்.

திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்களின் தொகை அதிகமாக இருப்பதனை இல்லாமற் செய்வதற்கு இனவாதிகள் பலமான முயற்சிகளை தொடராக மேற் கொண்டு வருகின்றனர்.

இம்முயற்சியை சாத்தியப்படுத்துவதற்கு காணிகளை கையகப்படுத்துவதும் இன்றியமையாதது என்பதனாலேயே  காணி அபகரிப்பில்  அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

எனவேää இனவாதிகளின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு அவர்களுக்கெதிரான சட்டரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ஓன்றிணைவார்களா?!

No comments:

Post Top Ad