யுத்தத்தினால் இடம் பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கியுள்ள பெண்களை வலுவூட்டும் விழிப்புனர்வு நிகழ்வு-(படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, December 28, 2013

யுத்தத்தினால் இடம் பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கியுள்ள பெண்களை வலுவூட்டும் விழிப்புனர்வு நிகழ்வு-(படங்கள் இணைப்பு)(பழுலுல்லாஹ் பர்ஹான்)

யுத்தத்தினால் இடம் பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கியுள்ள பெண்களை வலுவூட்டும் விழிப்புனர்வு நிகழ்வு வேலைத்திட்டத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் இடம் பெற்று வருவதாக பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா ஹம்சா தெரிவித்தார்.


பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்கும் நிறுவனத்தினால் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவரலாயத்தின் உதவியுடன் இடம் பெயர்ந்த பெண்கள் தீர்மானம் எடுத்தலிலும் பொருளாதார வலுவூட்டலிலும் பங்கு பற்றுதலுக்கு ஏற்ற சூழலிற்கு சக்தியளித்தல் எனும் தலைப்பிலேயே இந்த விழிப்புனர்வு வேலைத்திட்டம் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த விழிப்புனர்வு நிகழ்ச்சி வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி மற்றும் செங்கலடிää வவுணதீவு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழு; செயலமர்வொன்று  (26.12.2013))செங்கலடி  பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் செங்கலடி பிரதேச செயலாளர் உதயசிறீதரர் மற்றும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்கும் நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா அமீர் ஹம்சா மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரி ஏ.எல்.அப்துல் அஸீஸ் உட்பட பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்கும் நிறுவனத்தின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
No comments:

Post Top Ad