ஷியாம் கொலை குற்றவாளி வாஸ் குற்றப்பத்திரிகையில் மேலும் ஒரு குற்றச்சாட்டு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, December 20, 2013

ஷியாம் கொலை குற்றவாளி வாஸ் குற்றப்பத்திரிகையில் மேலும் ஒரு குற்றச்சாட்டு

(tm)

பம்பலப்பிட்டியை சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகர் ஷியாம் கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்த்தனவின் குற்றப்பத்திரிகையில் மேலும் ஒரு குற்றச்சாட்டு சேர்க்கப்பட்டுள்ளது.

கொலை தொடர்பாக விசாரணை செய்த குற்றப்புலனாய்வுப் பிரிவை சேர்ந்த உதவி பொலிஸ் அத்தியட்சர் ஷிராணி அபேசேகரவையும் வேறு புலனாய்வு அதிகாரிகளையும் மிரட்டினார் என்பதே இந்த குற்றச்சாட்டாகும்.

சந்தேகநபரான குணவர்த்தனவுக்கு பிணை வழங்குவது பற்றி ஆராய்வதற்காக கோட்டை நீதவான் நீதிமன்றில் நடந்த சுருக்க முறையற்ற விசாரணையின் சாரம்சத்தை தாக்கல் செய்யும்படி மேல் நீதிமன்ற நீதிபதி இராங்கனி பெரேரா பணித்ததுடன் வழக்கு விசாரணையை ஜனவரி 9 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

No comments:

Post Top Ad