இஸ்லாம் மார்க்கத்தை இழிவு படுத்திய பரீட்சை வினாத்தாள் ! கல்வி அமைச்சு மன்னிப்பு கோரவேண்டும் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, December 23, 2013

இஸ்லாம் மார்க்கத்தை இழிவு படுத்திய பரீட்சை வினாத்தாள் ! கல்வி அமைச்சு மன்னிப்பு கோரவேண்டும்

(im)
க.பொ.த.சாதாரண தர பரீட்சையின் குடியுரிமைக் கல்வி மற்றும் சமூக நிர்வாகம் என்ற பாட வினாத்தாளில் இஸ்லாமிய சட்டத்தின் பாதகமான இரண்டு மூலாதாரங்களை தருக என கேள்வி இடம்பெற்றமைக்காக கல்வி அமைச்சரும், பரீட்சை திணைக்களமும் பகிரங்க மன்னிப்பு கேட்பதுடன் மேற்படி வினாவுக்கான மார்க்குகளை இல்லாமல் செய்ய வேண்டும் என முஸ்லிம் மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது சம்பந்தமாக முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவியினால் கல்வி அமைச்சருக்கு தொலைநகல் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,
இவ்வாறு பிழையான கேள்வியை இளம் மாணவர்களிடம் கேட்டிருப்பது இஸ்லாத்தை அவமதிக்கும் திட்டமிடப்பட்ட நடவடிக்கையாகவே தெரிகிறது. இத்தகைய கேள்வியை எடுத்தவர் யார் ஏன் எடுத்தார் என்பது பற்றி கல்வி அமைச்சு விசாரித்து அது பற்றி எமக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.
இவ்வாறு ஒரு சமயம் பற்றிய அறிவில்லாமல் கேள்வி எடுக்கக் கூடிய முட்டாள்களையா பரீட்சைத் திணைக்களம் கொண்டுள்ளது என்று நாம் கேட்கிறோம். பௌத்த மதத்தின் பாதகமான பக்கங்களை தருக என கேள்வி கேட்கப்பட்டிருந்தால் இந்த நாடு தாங்குமா என்றும் கேட்கின்றோம்.
இவ்வாறுதான் 2009ம் ஆண்டு நடைபெற்ற மௌலவி ஆசிரியர்களுக்கான போட்டிப்பரீட்சையிலும் மௌலவிமாரை அவமானப்படுத்தும் வகையில் பைலட் பிரேம்நாத் என்ற சினிமா படத்தின் இசையமைப்பாளர் யார் என கேட்கப்பட்டிருந்தது. இது பற்றி நாம் பகிரங்கமாக கண்டித்ததுடன் அன்றைய கல்வி அமைச்ரின் கவனத்துக்கும் கொண்டு வந்தோம்.
இப்போது தமிழ் மொழியில் இவ்வாறான கேள்வி கேட்கப்பட்டுள்ளமை தமிழ் பேசும் மாணவர்கள் உள்ளத்தில் விசத்தை விதைப்பதாகும். இதனை கல்வி அமைச்சின் கட்டுப்பாட்டிலள்ள பரீட்சை திணைக்களம் முன்னெடுத்துள்ளது கண்டிக்கத்;தக்கதாகும்.
இக்கேள்வி வெளியாகி இன்றுடன் மூன்று நாட்களாகியும் இது பற்றிய கண்டனத்தை பகிரங்கமாக தெரிவிக்க முடியாத மடையர்களாகவே முஸ்லிம் அரசியல் தலைமைகளும் மாகாண, மாநகர சபை உறுப்பினர்களும் காணப்படுவது எமது கவலைக்குரியதாகும்.
இத்தகைய அறிவற்றவர்கள் மத்தியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபைர் அவர்கள் இது பற்றி எமது கட்சியின் கவனத்துக்கு கொண்டு வந்ததற்காக அவரை நாம் இந்த இடத்தில் பாராட்டுகின்றோம்.
ஆகவே இது பற்றி கல்வி அமைச்சர் உடனடி நடவடிக்கைகள் எடுப்பதுடன் இது விடயத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சித்தலைவர்களும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் முஸ்லிம் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.

No comments:

Post Top Ad