வைத்திய மற்றும் பொறியியல் பீடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கான கௌரவிப்பு நிகழ்வு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, December 22, 2013

வைத்திய மற்றும் பொறியியல் பீடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கான கௌரவிப்பு நிகழ்வு


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு- காத்தான்குடி இளந்தளிர் கல்வியகத்தில் விஞ்ஞான மற்றும் கணித பிரிவுகளில் கல்விகற்று 2013ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கத் தோற்றி வைத்திய மற்றும் பொறியியல் பீடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கான கௌரவிப்பு நிகழ்வும் ääபரிசளிப்பு வைபவமும் 21-12-2013  சனிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.


காத்தான்குடி இளந்தளிர் நற்பணிமன்றத்தின் தலைவர் ஆதம் அலி இர்சாத் முஹம்மட் அலி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் கலந்து கொண்டதோடு விஷேட அதிதியாக  பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் உப தலைவர் எம்.ஐ.எம்.சுபைர் ääகாத்தான்குடி இலங்கை மின்சார சபையின் அத்தியட்சகர் நௌபல்ääஇளந்தளிர் நற்பணிமன்றத்தின் தலைவர் செயலாளர்ääபொருளாளர் ஏ.பி.எம்.ஜலால்தீன் உட்பட அதன் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு கிழக்கு பல்கலைக் கழக மருத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளர் டாக்டர் சர்ஜூன்  எம்.பி.பி.எஸ்.ääதென்கிழக்குபல்கலைக் கழக பொறியியல் பீட விரிவுரையாளரும்; இளந்தளிர் நற்பணிமன்றத்தின் செயலாளருமான பொறியியலாளர் ஏ.எல்.எம்.றிஸாத் ääதென்கிழக்குபல்கலைக்கழகமுகாமைத்துவ பீடமாணவனும் இளந்தளிர் நற்பணிமன்றத்தின் உப செயலாளருமான எம்.ஜே.எம். பாஸித்ää மட்- அல்அமீன் மகாவித்தியாலயத்தின் சிரேஷ்ட ஆசிரியரும் இளந்தளிர் நற்பணிமன்றத்தின் உப தலைவருமான சப்ரிää காத்தான்குடி மத்திய கல்லூரி ஆசிரியர் ஐ.டி. பாட ஆசிரியர ஸரீக்; ஆகியோர் வௌ;வேறு தலைப்புக்களில் விரிவுரைகளை நிகழ்த்தினர்.


இதன் போது 2013ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கத் தோற்றி வைத்திய மற்றும் பொறியியல் பீடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகள் அதிதிகளினால் பரிசுப் பொதிகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இளந்தளிர் கல்வியகத்தில் இருந்து மருத்துவபீடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் விபரம்.

ஏ.எஸ்.எப்.சுமைலா 2 ஏ.பி.

ஏ.எல்.எப்.மாஹிறா 2 ஏ.பி.

ஏ.எல்.எப்.ஸிம்றா 2 ஏ.பி.

ஏஸ்.எம்.  இஹ்றான் 2 ஏ .பி.

ஏ.எஸ்.எம்.சப்றான் சப்றான் 2ஏ பி.


No comments:

Post Top Ad