பிரேசில் உலகக்கிண்ண உதைபந்தாட்ட போட்டி நடைபெறவுள்ள மைதானத்தில் மற்றுமொரு விபத்து - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, December 16, 2013

பிரேசில் உலகக்கிண்ண உதைபந்தாட்ட போட்டி நடைபெறவுள்ள மைதானத்தில் மற்றுமொரு விபத்து


பிரேஸிலில் உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி நடைபெறவுள்ள விளையாட்டரங்கின் கூரையிலிருந்து கீழே வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அடுத்தாண்டு பிரேஸிலில் உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டி நடைபெறவுள்ளது.
இதற்கான விளையாட்டரங்கு அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வரும் நிலையில் அரங்கின் கூரையிலிருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை இந்த சம்பவம் இடம்பெற்று சில மணிநேரங்களில் அங்கு கடமை புரிந்த மற்றுமொரு ஊழியரும் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிக வேலைப்பழு காரணமாகவே இவர் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர், பாரம் தூக்கும் இயந்திரம் உடைந்து வீழ்ந்ததில், மைதானத்தில் ஒரு பகுதி கட்டடம் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad