தெவனகலை விவகாரம் தொடர்பாக கடுகஹவாத்த ஜும்மா பள்ளி வாசல் நிர்வாகம் எடுத்துள்ள முடிவு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, December 04, 2013

தெவனகலை விவகாரம் தொடர்பாக கடுகஹவாத்த ஜும்மா பள்ளி வாசல் நிர்வாகம் எடுத்துள்ள முடிவு

(maw)
இனவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்து தொல் பொருல் அதிகாரிகள் முஸ்லிம்களை தெவனகலை இலிருந்து வெளியேற்ற அடித்தாளம் இடுகின்றனரா எனும் சந்தேகம் மீன்டும் வலுத்து வருகிறது. அந்த அடிப்படையில் கடுகஹவாத்த ஜும்மா பள்ளி வாசல் நிர்வாகம் பின்வரும் முடிவுகளை எடுத்துள்ளது.

இதற்குமுன் முஸ்லிம்களின் சொந்தக் காணிகளில் கால்நடைகளுகு உணவுக்காக மரம் வெட்டப்பட்ட போது முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். அதே காணிகளில் வீட்டு வேலி நிர்மானிக்க முற்பட்ட போது பகிரங்கமாக தடுக்கபபட்டனர். காவல் நிலையத்துக்கு வரவழைக்கபபட்டு விசாரிக்கப்பட்டனர் இன்று வரை நிர்மான வேலைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.
முஸ்லிம்களை வேண்டுமேன்ரே வம்புக்கிளுக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த எல்லா சந்தர்ப்பங்களிலும் முஸ்லிம்கள் புத்தியுடன் சட்டத்தை மதித்து பொறுமை காத்தனர். எனினும் இனிவரும் காலங்களில் பொது மக்களின் கானிகளுக்குள் அனுமதியில்லாமல் எந்த அதிகாரியோ இன்வாதியோ அனுமதிககப்படமாட்டாது.
அவர்களுகு சொந்தமான காணியின் 6 அடியல்ல ஒரு அடியேனும் விட்டுக்கொடுக்கப் படமாட்டாது. வெளியிடங்களில் இருந்து வந்துள்ள இனவாதிகள் விரட்டப்படும் வரை மேலதிக எந்த நடவடிக்கைகளுக்கும் இடமளிக்கப்படமாட்டாது.

கடுகஹவாத்த ஜும்மா பள்ளி வாசல்
நிர்வாகம்

No comments:

Post Top Ad